டெல்லி: மத்திய அரசு ஆன்லைன் கேமிங் மசோதா 2025ஐ நிறைவேற்றி சட்டமாக மாற்றியுள்ளது. இந்த மசோதாவின் படி இந்தியாவில் ஆன்லைனில் பணத்தைப் பந்தயமாக வைத்து விளையாடப்படும் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் விளையாட்டு சட்டம்: இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் இ - ஸ்போர்ட் துறையில் முன்னோடியாக திகழக்கூடியது நசாரா டெக்னாலஜிஸ் நிறுவனம் . ஆன்லைன் கேமிங் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20% வரை சரிந்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக இருந்தவர் மறைந்த பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவியான ரேகா ஜுன்ஜுன்வாலா.

சர்ச்சையாகும் பங்கு விற்பனை: அவர் இந்த சட்ட மசோதா வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் திடீரென இந்த நிறுவனத்தில் தன் வசம் இருந்த அனைத்து பங்குகளையும் விற்பனை செய்து வெளியேறியிருக்கிறார். இதுதான் தற்போது பெரிய சர்ச்சையாக உருவாகி உருவெடுத்து இருக்கிறது. நசாரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவிற்கு சொந்தமாக 7.06 சதவீத பங்குகள் அதாவது 61.8 லட்சம் பங்குகள் இருந்தன.
ரூ.334 கோடி லாபம்: ஜூன் மாத இறுதியில் அவர் இந்த பங்குகள் அனைத்தையுமே விற்பனை செய்து வெளியேறி இருக்கிறார். ஒரு பங்கினை 1225 ரூபாய் என்ற அளவில் அவர் விற்பனை செய்திருக்கிறார் இதன் மூலம் அவருக்கு 334 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு இந்த ஆன்லைன் விளையாட்டு மசோதாவை நிறைவேற்றிய பிறகு நசாரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு சரிவடைந்திருக்கிறது .சில்லறை முதலீட்டாளர்கள் பலத்த நஷ்டம் அடைந்திருக்கின்றனர்.
செபி தூங்குகிறதா?: ஆனால் இந்த சட்டம் வருவதற்கு முன்னதாகவே எப்படி ரேகா ஜுன்ஜுன்வாலா இந்த நிறுவன பங்குகள் அனைத்தையும் முழுமையாக விற்பனை செய்துவிட்டு வெளியேறினார் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது . திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதே கேள்வியை முன் வைத்திருக்கிறார். இது உள் வர்த்தகம், இதுவே அமெரிக்காவாக இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தி இருப்பார்கள் ஆனால் இந்தியாவிலோ பக்தர்கள் இதனை கைதட்டி பாராட்டுகிறார்கள் , செபியோ தூங்கிக் கொண்டிருக்கிறது என கடுமையான வார்த்தைகளால் சாடி இருக்கிறார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்று இருக்கிறது .
உள் வர்த்தகம் என்றால் என்ன?: ஒரு நிறுவனம் தொடர்பான தகவல்கள் சென்சிடிவான விஷயங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாமல் இருக்கக்கூடிய சில தகவல்கள் தனி நபர்களுக்கு மட்டும் கசியும் அந்த தகவல்களை பயன்படுத்தி அந்த நபர் நிறுவன பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வதுதான் உள் வர்த்தகம் என அழைக்கிறார்கள். இந்தியாவில் தனிப்பட்ட லாபத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது முறைகேடான விஷயமாக பார்க்கப்படுகிறது. நசாரா டெக்னாலஜிஸ் நிறுவன பங்கு இன்று 1111 ரூபாய் என வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications