சென்னை: இன்ஸ்டாகிராம் என்பது ஒரு சமூக ஊடகம் ஆகும். நமது பொழுதுபோக்குக்காக ரீல்ஸ் பார்க்கலாம், பிறரிடம் சாட் செய்யலாம், மேலும் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் இன்ஸ்டாகிராமில் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறீர்கள், திடீரென உங்கள்
மெசேஜ்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அப்போது ஒரு சந்தேகம் எழும். அதாவது அவர் நம்மை பிளாக் செய்து இருப்பாரோ என்று, ஒருவர் உங்களை பிளாக் செய்து இருக்கிறார் என்று இன்ஸ்டாகிராம் தெரிவிக்காத நிலையில், அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது? அதைப் பற்றி பின்வரும் கட்டுரையில் பார்ப்போம்.

சர்ச் பார்-ஐ (Search bar) பயன்படுத்தவும்: உங்களை பிளாக் செய்து இருப்பார் என்று நீங்கள் நினைக்கும் நபரின் ஐடியை சர்ச் செய்யவும். நீங்கள் தேடுபவரின் ஐடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவர் உங்களை பிளாக் செய்திருக்கலாம் அல்லது அவருடைய ID பெயரை மாற்றி இருக்கலாம். இன்ஸ்டாகிராம் பயனர்கள், அவர்களுடைய ID பெயரை மாற்ற முடியும். அவர் பெயரை மாற்றவில்லை என்றால் உங்களுடைய சர்ச் பார்க்கு சென்று அவருடைய ID பெயரை வைத்து தேடுங்கள் . நீங்கள் குறிப்பிட்ட ID இன் பெயரில் எந்த ஒரு அக்கவுண்ட்டும் இல்லை என்றால் அவர் உங்களை பிளாக் செய்து இருக்கிறார் என்று அர்த்தம்.
மற்றொரு அக்கவுண்டில் சரிபார்க்கவும்: யாராவது உங்களை பிளாக் செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறிய, மற்றொரு அக்கவுண்டில் அல்லது உங்களின் நண்பரின் அக்கவுண்டில் இருந்து நீங்கள் தேடும் நபரின் ID விபரங்களைத் தேடுங்கள். அவ்வாறு தேடும் பொழுது, உங்கள் அக்கவுண்டில் இல்லாமல் மற்ற அக்கவுண்டில் அவருடைய ID-யை கண்டறிய முடிகிறது என்றால் அவர் உங்களை பிளாக் செய்து இருக்கிறார் என்று அர்த்தம். மற்ற அக்கவுண்டிலும் கண்டறிய முடியவில்லை என்றால் அந்த ID-யை டெலிட் செய்து இருப்பார்.
அவர்களின் இன்ஸ்டாகிராம் விவரத்தை இணையத்தில் திறக்கவும்: ஒவ்வொரு பயனற்கும் தனிப்பட்ட சுயவிவர URL இருக்கும். அந்த URL-ஐ வைத்து அவர்களின் சுயவிவரத்தை இணையத்தில் தேட முயற்சி செய்யுங்கள்."sorry this page not available " என்று வந்தால் அந்த அக்கவுண்ட் செயலிழக்க பட்டிருக்கலாம் அல்லது உங்களை பிளாக் செய்திருக்கலாம்.
அவர்களின் அக்கவுண்ட்டை மென்ஷன் செய்யவும்: உங்களை பிளாக் செய்திருப்பார் என்று என்னும் நபரின் அக்கவுண்ட்டை உங்கள் ஸ்டோரி-இல் மென்சன் செய்ய முடியவில்லை என்றால் அவர் உங்களை பிளாக் செய்துள்ளார்.
உங்களை பிளாக் செய்த ஒருவரின் அக்கவுண்டிற்கு உங்களால் செய்தி அனுப்பவோ follow செய்யவோ முடியாது. ஆனால் அவர்களுடைய பழைய மெசேஜ்களை இன்ஸ்டாகிராம் தக்க வைத்துக் கொள்ளும். அதில் சென்று அவர்களுடைய ப்ரோபைலை பார்க்கும் பொழுது அவருடைய பயோடேட்டா தெரியவில்லை என்றால் அவர் உங்களை பிளாக் செய்திருக்கலாம்.
நேரடி மெசேஜ்களை சரிபார்க்கவும் : உங்களுடைய DM-களுக்குச் சென்று அந்த நபரின் உரையாடலைத் திறக்கவும். அந்தத் திரையின் மேல்புறத்தில் அவருடைய யூசர்நேம் "instagram user" என்று உங்கள் அக்கவுண்டிற்கு மட்டும் காட்டினால், அவர் உங்களை பிளாக் செய்து இருக்கிறார். மற்ற அக்கவுண்டிற்கும் அதுபோன்றே காட்டினால் அவருடைய அக்கவுண்ட் செயலிழந்துவிட்டது. மேலும் அவருடைய ப்ரொபைல் படங்கள் காட்டப்படாது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications