டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்..! வைரலாகும் ரெடிட் பதிவு!!

தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக வெளியாக கூடிய ஒவ்வொரு தகவல்களும் நமக்கு அதிர்வலைகளையும் ஏற்படுத்துகின்றன .

குறிப்பாக மருத்துவர்களை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் ஜெய் ஸ்ரீ முகமது பயங்கரவாத அமைப்பின் போக்கு அனைவரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியாக கூடிய ஒவ்வொரு தகவலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழலில் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ரெடிட் தளத்தில் வெளியான ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்..! வைரலாகும் ரெடிட் பதிவு!!

டெல்லி செங்கோட்டை அருகே மாலை 7 மணி அளவில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறி 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இது ஒரு தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ரெடிட் பக்கத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.

டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்..! வைரலாகும் ரெடிட் பதிவு!!

அதில் டெல்லியில் ஏதேனும் நடக்கிறதா என்ற கேள்வியுடன் அவர் அந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார் . அதாவது சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தான் பயணம் செய்திருந்ததாகவும் அப்போது அங்கே அதிக அளவில் காவல்துறையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறியிருக்கிறார் . திங்கட்கிழமை அன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டிருக்கும் ரெடிட் பதிவில் அந்த நபர் 12ஆம் வகுப்பு படிப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார் ,இப்பொழுது தான் நான் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பினேன், நான் பொய் கூறவில்லை எங்கு பார்த்தாலும் காவல்துறையினரும் ராணுவத்தினரும் ஊடகத்தினருமாகவே காட்சியளிக்கிறார்கள். செங்கோட்டை மெட்ரோ பகுதியில் இதை நான் பார்த்தேன் வழக்கத்தை விட இன்று அதிகமான இராணுவத்தினர் உள்ளனர், டெல்லியில் ஏதேனும் நடக்கிறதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவர் இந்த பதிவை வெளியிட்ட 3 மணி நேரத்தில் கார் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சிலர் இந்த சகோதரர் நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கை தந்திருக்கிறார் என கூறியிருக்கின்றனர். இதற்கிடையே அந்த நபர் தற்போது அந்த பதிவினை நீக்கிவிட்டார்.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்ற வருகிறது . அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். தேசிய புலனாய்வு முகமை, டெல்லியின் பயங்கரவாத தடுப்பு காவல் பிரிவு என பல்வேறு பிரிவுகளும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+