கணவன் மனைவி கூட்டாக வீட்டு கடன் வாங்குவதில் என்ன நன்மை.?

சென்னை: கணவன் மனைவி என இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால் சொந்தமாக ஒரு வீடு வாங்கும் போது ஜாயிண்ட் லோன் என்ற பெயரில் கணவன் மனைவி என இருவரும் கூட்டாக சேர்ந்து வீட்டுக்கடன் வாங்கி விடலாம். இவ்வாறு இரண்டு பேர் இணைந்து வீட்டுக் கடன் வாங்கும் போது அதில் சாதக பாதகங்கள் இருக்கின்றன. அவற்றை முன்கூட்டியே ஆய்வு செய்து கொள்வது நல்லது.

அதிக கடன் தொகை: இரண்டு பேரின் வருமானத்தை இணைத்து வீட்டு கடனுக்காக விண்ணப்பம் செய்யும் போது உங்களுக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்பும், நீங்கள் குறிப்பிட்ட தொகை முழுவதுமாக கடனாக கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. ஏனெனில் உங்களுடைய கடனை திரும்ப செலுத்தும் திறனை மதிப்பிட இரண்டு வருமானங்களையுமே வங்கிகள் கருத்தில் கொள்ளும். எனவே உங்களுக்கு அதிகபட்ச தொகை கடனாக கிடைக்கும்.

கணவன் மனைவி கூட்டாக வீட்டு கடன் வாங்குவதில் என்ன நன்மை.?

வரி சலுகைகள்: தம்பதிகள் வீட்டு கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தும் போது அவற்றுக்கான வரி விலக்குகளை பெற முடிகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி மற்றும் 24இன் கீழ் ஒவ்வொரு கடனாளியும் வீட்டுக் கடனுக்காக திரும்ப செலுத்தும் அசல் தொகைக்கும் அதேபோல அதற்காக செலுத்தும் வட்டி தொகைக்கும் வரி விலக்கு பெற முடியும். தம்பதியாக இரண்டு பேருமே இதில் வரிச்சலுகை பெற முடியும் என்பது மிகப்பெரிய நன்மையாக பார்க்கப்படுகிறது.

குறைந்த வட்டி: பல்வேறு வங்கிகளும் இவ்வாறு கூட்டாக வீட்டுக் கடனுக்காக விண்ணப்பம் செய்யும்போது முதன்மை விண்ணப்பதாராக மனைவி இருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் குறைந்த வட்டி வீதத்தை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது.

பொறுப்பு பகிர்வு: தம்பதிகள் கூட்டாக வீட்டுக் கடன் வாங்குவதால் அவர்களின் நிதி பொறுப்பானது இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே கடனை திரும்ப செலுத்தும் சுமை இரண்டாகப் பிரிகிறது. இதனால் அவர்களுக்கு நிதி சார்ந்த அழுத்தமும் சொத்தின் மீது ஒரு பகிரப்பட்ட பொறுப்பையும் வழங்குகிறது.

எதிர்கால நிகழ்வுகள்: இரண்டு பேர் இணைந்து ஒரு சொத்துக்காக வீட்டு கடன் வாங்குகிறார்கள் என்றால் அதன் உரிமையும் இரண்டு பேரிடமும் இருக்கும். எனவே எதிர்காலத்தில் ஏதேனும் எதிர்பாராத சூழல் உண்டானால் கூட இருவருக்குமே இந்த வீட்டின் மீதான உரிமையும் கடன் மீதான பொறுப்பும் சமமான அளவில் இருக்கும்.

ஒருவர் தவறினால் மற்றவருக்கு சுமை: இருவருக்குமே கடனை திரும்ப செலுத்துவதற்கான பொறுப்பு சமமாக இருக்கிறது. இதில் ஒருவர் அந்த பொறுப்பை தவறவிட்டால் கூட மற்றொருவர் மீது அந்த சுமை விழுந்து விடும்.

கிரெடிட் ஸ்கோர்: ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் கூட மற்றொரு நபரின் கிரெடிட் ஸ்கோரையும் இது பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

கடனில் இருந்து வெளியேறுவது: ஒருவேளை தம்பதிகள் விவாகரத்து போன்ற முடிவுகளை எடுத்தால் கடன் வாங்கிய இரண்டு பேரில் ஒருவர் கடனிலிருந்து வெளியேற வேண்டும் என விரும்பினால் அந்த சொத்தின் மீதான உரிமையையும் கடன் பொறுப்பையும் மற்றொருவருக்கு மாற்ற வேண்டும். இந்த நடைமுறை மிகவும் சிக்கலானதாக இருக்கும். இதற்கு அதிக தொகையை செலவிட வேண்டியது இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+