AI Bubble-ன் கோர முகம்.. 1990 கதை அப்படியே நடக்குதே..!! சுத்தி சுத்தி பணம் யாருக்கு தான் போகுது..!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகை மாற்றப்போவதாக பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் ஏஐ தொடர்புடைய நிறுவனங்களின் மதிப்பு விண்ணை முட்டுகிறது. குறிப்பாக, என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த GDP அளவான 4.19 டிரில்லியன் டாலரை விட அதிகம். இதன் மூலம் என்விடியா உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக்கியுள்ளது.

ஆனால் இந்த பங்கு விலை உயர்வின் பின்னணியில் மிகப்பெரிய அளவிலான பணம் சுழற்சி முறையில் முதலீடு செய்யப்பட்டு வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது 1990களின் இறுதியில் நடந்த டாட்காம் பபுள் போலேவே இருப்பதாகவும் கருத்து நிலவுகிறது.

AI Bubble-ன் கோர முகம்.. 1990 கதை அப்படியே நடக்குதே..!! சுத்தி சுத்தி பணம் யாருக்கு தான் போகுது..!

டாட்காம் ப்புள் என்றால் என்ன?
1990களின் இறுதியில் இன்டர்நெட் பெரும் நம்பிக்கையையும், பிரமிப்பையும் உருவாக்கியது. இக்காலக்கட்டத்தில் பல புதிய இண்டர்நெட் மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் உருவாகின. இவை ".com" என்ற பெயரில் இணையதளங்கள் வைத்திருந்த காரணத்தால் தான் டாட்காம் ப்புள் என்ற சொல் உருவானது.

முதலீட்டாளர்கள் இண்டர்நெட் உலகை மாற்றும் என நம்பி, இத்துறையில் இருக்கும் நிறுவனங்களில் பெரும் பணத்தை கொட்டினர். இந்க நிறுவனங்கள் லாபம் ஈட்டாவிட்டாலும், கண்களை முடிக்கொண்டு முதலீடு செய்து அவற்றின் பங்கு விலை விண்ணை முட்ட காரணமாக இருந்தது. இதன் எதிரொலியாக அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை குறியீடு 1995ல் 750இலிருந்து 2000 மார்ச்சில் 5000க்கு மேல் உயர்ந்தது. இது தான் டாட்காம் குமிழி உருவான தருணம்.

குமிழி வெடித்தது எப்படி?
2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த குமிழி வெடித்தது. பல நிறுவனங்கள் லாபம் இல்லாமல் பணத்தை செலவழித்து தீர்ந்தன. புதிய முதலீடு கிடைக்காமல் நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் நாஸ்டாக் குறியீடு 78 சதவீதம் வரை வீழ்ந்தது இக்காலக்கட்டத்தில் பல முன்னணி இண்டர்நெட் நிறுவனங்கள் மூடப்பட்டன. முதலீட்டாளர்கள் டிரில்லியன் கணக்கில் பணத்தை இழந்தனர். அமேசான், இபே போன்ற சில நிறுவனங்கள் மட்டும் தப்பின.

கிட்டத்தட்ட இதை நிலை தான் தற்போது ஏஐ துறையிலும் உருவாகியிருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் நம்புகிறது. சரி ஏஐ துறையில் குமிழி எப்படி உருவாகியுள்ளது என்பது குறித்து ப்ளூம்பெர்க் ஒரு முக்கியமான மேப் வெளியிட்டுள்ளது.

AI Bubble-ன் கோர முகம்.. 1990 கதை அப்படியே நடக்குதே..!! சுத்தி சுத்தி பணம் யாருக்கு தான் போகுது..!

ஏஐ எகோசிஸ்டம்
ப்ளூம்பெர்க் வெளியிட்ட ஏஐ எகோசிஸ்டம் வரைபடத்தில் என்விடியா தான் அனைத்து துறைக்கும், அனைத்து நிறுவனங்களுக்கும் மைய புள்ளியாக உள்ளது. ஏஐ லாங்குவேஜ் மாடல்களை இயக்க தேவையான சிப்களை உற்பத்தி செய்யும் என்விடியா, க்ளவுட் நிறுவனங்கள், லாங்குவேஜ் மாடல் உருவாக்கும் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏஐ கட்டமைப்பு அவசியம், இந்த கட்டமைப்புக்கு அதிநவீன சிப் தேவை. தற்போது சந்தையில் இதை உருவாக்கும் ஒரே நிறுவனம் என்விடியா.

AI Bubble-ன் கோர முகம்.. 1990 கதை அப்படியே நடக்குதே..!! சுத்தி சுத்தி பணம் யாருக்கு தான் போகுது..!

சுத்தி சுத்தி அடிக்கும் பணம்
ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் என்விடியா சிப்களை பெருமளவில் வாங்குகின்றன. அதே நேரம் என்விடியா ஓபன் ஏஐயில் சுமார் 100 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் பணம் ஒரு வட்டத்தில் புழங்குகிறது.

மறுமுனையில் ஓபன் ஏஐ கிளவுட் சேவைக்காக ஓரக்கிள் நிறுவனத்துடன் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.

ஓரக்கிள் தனது கிளவுட் மற்றும் டேட்டா சென்டர் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக திரும்பவும் என்விடியா சிப்களை வாங்க பல கோடி டாலர்களை கொடுக்கிறது.

என்விடியா ஓபன் ஏஐயில் முதலீடு செய்கிறது. ஓபன் ஏஐ அந்த பணத்தை க்ளவுட் சேவைக்கு செலவிடுகிறது. ஓரக்கிள் அதை என்விடியா சிப்களுக்கு செலவிடுகிறது. இப்படி ஓரே பணம் ஒரே சூழலுக்குள் சுழன்று நிறுவனங்களின் வருவாயையும் மதிப்பையும் செயற்கையாக உயர்த்துகிறது. ஆனால் இது உண்மையான லாபத்துடன் தொடர்புடையதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

டாட்காம் குமிழியுடன் ஒப்பீடு
1990களின் இறுதியில் இண்டர்நெட் நிறுவனங்களில் இதேபோல பெரும் முதலீடு குவிந்தது. இத்துறையில் இருந்த பெரும் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று சேவை வழங்கி வருவாயை உயர்த்திக்காட்டின. ஆனால் இந்த ஆட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு காட்ட வேண்டிய உண்மையான லாபம் இல்லாததால் டாட்காம் பபுள் வெடித்தது. பல நிறுவனங்கள் மறைந்தன.

இப்போது ஏஐ நிறுவனங்களும் இதேபோன்று ஒன்றுக்கொன்று பணத்தை முதலீடு செய்தும் செலவு செய்யும் அதன் மதிப்பு, வருவாய் அளவீட்டை உயர்த்துவதாக விமர்சகர்கள் நிலவுகிறது. ஏஐ தொழில்நுட்பம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய முதலீடுகள் அளவுக்கு அதிகமானதாக உள்ளது, இந்த முதலீட்டுக்கு ஏற்ற லாபம் இல்லை என்பதே தற்போதைய கவலை.

AI Bubble-ன் கோர முகம்.. 1990 கதை அப்படியே நடக்குதே..!! சுத்தி சுத்தி பணம் யாருக்கு தான் போகுது..!

நீண்டகால வளர்ச்சிக்கான அடையாளமா?
ஏஐ துறையில் பெரும் முதலீடுகள் தேவைப்படும் உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன. என்விடியா சிப்கள், டேட்டா சென்டர்கள் போன்றவை எதிர்காலத்தில் உண்மையான பயனை தரலாம் ஆனால் உலகளாவிய 8 டிரில்லியன் டாலர் ஏஐ முதலீட்டுக்கு கடனை திருப்பி செலுத்தவே 10 சதவீதம் லாபத்தை ஈட்டியாக வேண்டும் அதாவது 800 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியாக வேண்டும்.

இந்த கடனுக்கும், லாப அளவீட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை 2-3 வருடம் ஏற்றுக்கொள்ள முடியும். சொல்லப்போனால் தற்போது உலகளாவிய வட்டி விகிதம் குறைந்து வருவது ஏஐ முதலீடுகளை காப்பாற்றி வருகிறது. இந்த 2-3 வருடத்திற்குள் ஏஐ துறையில் பெரும் தாக்கம் உருவாகும் என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து உங்க கருத்து என்ன..? உங்க கருத்தை கமெண்ட் ஆக பதிவு செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+