நம்முடைய வாழ்க்கை முறையில் புதிய புதிய விஷயங்கள் பயன்பாட்டுக்கு வரும் போது சில பழைய விஷயங்கள் தேவையற்று பயன்பாட்டில் இருந்து நீங்கும். உதாரணமாக Fax, சிடி/டிவிடி, பேஜர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 80களின் பிற்பகுதியில் துவங்கிய தொழில்நுட்ப புரட்சி இந்த மாற்றத்தை வேகப்படுத்தியது.
இத்தகைய சூழ்நிலையில் இன்றைய வேகமான டெக் உலகில் நம்முடைய பொழுதுபோக்கு பிரிவில் பல விஷயங்கள் வந்துக்கொண்டு இருக்கும் வேளையில் பல கோடி மக்களின் வீட்டில் கேபிள் டிவி மாயமாகி வருகிறது. 90களில் ஆண்டனா வைத்து டிடி சேனலை புள்ளி புள்ளியாக பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு கேபிள் டிவி வாயிலாக கிளியராக கலர் பிக்சர் முதல் முறையாக பார்த்தது அனுபவம் இன்றும் பலருக்கும் நினைவிருக்கும்.

இத்தகைய கேபிள் டிவி துறை மாயமாகி வருகிறது மிகுந்த வருத்ததை அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கேபிள் டிவி துறையில் என்ன நடக்கிறது..?
இந்தியாவின் கேபிள் டிவி துறை கடந்த ஏழு ஆண்டுகளில் கடுமையான வர்த்தகம் மற்றும் பயன்பாட்டு சரிவை சந்தித்துள்ளது. 2018 முதல் 2025 வரையிலான காலத்தில் மட்டும் இத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றிய சுமார் 5.77 லட்சம் பேர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர் என ஆல் இந்தியா டிஜிட்டல் கேபிள் ஃபெடரேஷன் (AIDCF) மற்றும் EY இந்தியா இணைந்து வெளியிட்ட 'State of Cable TV Distribution in India' அறிக்கை தெரிவிக்கிறது.
கேபிள் டிவி சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி: 2018-ல் 151 மில்லியன் ஆக இருந்த கேபிள் டிவி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 2024-ல் 111 மில்லியனாக குறைந்ததுள்ளது. 2030-க்குள் இது 71-81 மில்லியனாக மேலும் குறையும் என இந்த அறிக்கை கணிக்கப்பட்டு உள்ளது.
என்ன காரணம்: மக்கள் கேபிள் டிவி சேவையை பயன்படுத்த குறைய என்ன காரணம் என பார்த்தால், இன்றைய ஸ்மார்ட் டிவி-யில் இண்டர்நெட் கனெக்ஷன் இருந்தால் மொத்த பொழுதுபோக்கு அம்சங்களும் விரல் நுனியில் வந்துவிடுகிறது. இதனால் கேபிள் டிவி-யின் அவசியம் இல்லாமல் போகிறது. மேலும் அதிகரிக்கும் சேனல் கட்டணங்கள், ஓடிடி (OTT) தளங்களின் போட்டி, மற்றும் டிடி ஃப்ரீ டிஷ் போன்ற இலவசம், ஒழுங்குபடுத்தப்படாத சேவைகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
வருவாய் மற்றும் லாபத்தில் வீழ்ச்சி: உதாரணமாக இந்தியாவின் 4 நேரடி-பிராட்காஸ்ட் (DTH) நிறுவனங்கள் மற்றும் 10 முக்கிய கேபிள் டிவி வழங்குநர்களின் (MSO) ஒட்டுமொத்த வருவாய் 2018 முதல் 2024ல் வரையிலாக காலக்கட்டத்தில் சுமார் 16% குறைந்துள்ளது.
2019-ல் இந்த 14 நிறுவனங்களின் வருவாய் என்பது 25,700 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் 2024-ல் 21,500 கோடி ரூபாயாக குறைந்ததுள்ளது. இதேபோல், EBITDA (லாபம்) 4,400 கோடி ரூபாயிலிருந்து 3,100 கோடி ரூபாயாக குறைந்து 29% சரிவை பதிவு செய்துள்ளது.
வேலை இழப்பு: மேலும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 28,181 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து (LCO) பெறப்பட்ட தகவல்களின்படி, LCO நிறுவனங்ளில் பணியாற்றிய 31% பேர் வேலை இழந்துள்ளனர். மேலும், 2018 முதல் 900 MSOக்கள் மற்றும் 72,000 LCOக்கள் மூடப்பட்டதால், மொத்த வேலை இழப்பு 5.77 லட்சமாக உயர்ந்துள்ளது.
கேபிள் டிவி எதிர்காலம்: கேபிள் டிவி துறையில் சவால்கள் இருந்தாலும், இத்துறையில் இருக்கும் முன்னணி டிவி சேனல் தலைவர்கள் நம்பிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஓடிடி தளங்களின் ஆதிக்கம் மற்றும் இலவச சேவைகளின் வளர்ச்சியை எதிர்கொள்ள, புதிய உத்திகள் மற்றும் மலிவு விலை சேவைகள் மூலம் சந்தையை மீட்க முயற்சிகள் தேவை எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இன்றளவும் நாடு முழுவதும் 9 கோடி இந்திய வீடுகள் கேபிள் டிவியை பயன்படுத்தி வருகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications