உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரம் அதிரடியாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் நடக்கும் ஆட்சி மாற்றம் அமெரிக்க மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகளாவிய மக்களுக்கு முக்கியமானதா விளங்குகிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், வலிமைமிக்க நாடுகளின் நடப்பு நாடாகவும் இருக்கும் அமெரிக்காவில் நடக்கும் ஆட்சி மாற்றம் சர்வதேச முதலீட்டுச் சந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்டது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டிப்போட்டு வரும் வேளையில், இருவருக்கும் வெற்றி வாய்ப்புகள் என்று இந்த தேர்தலுக்கான பிரச்சார காலத்தில் தொடர்ந்து மாறி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவில் ரெசிஷன் வருமா என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதற்கு முன்னதாக, உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ஸ்டோன் சிஇஓ ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன், அமெரிக்காவில் ரெசிஷன் ஏற்பட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பிளாக்ஸ்டோன் சிஇஓ ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் ப்ளூம்பெர்க் பத்திரிக்கைக்குப் பேட்டி அளிக்கையில், அமெரிக்காவில் மந்தநிலை நிலவுகிறதா? என்ற கேள்விக்கு மிகவும் தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார். இந்த அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ரெசிஷன் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவாக உள்ளது, மற்றும் அதிபர் தேர்தலில் போட்டிப்போடும் கமலா ஹாரீஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இரு வேட்பாளர்களும் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிகப்படியான ஊக்கமளிக்கும் கொள்கைகளைத் தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டு உள்ளனர் என்று பிளாக்ஸ்டோன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் ப்ளூம்பெர்க் பேட்டியில் கூறினார்.
இதனால் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அமெரிக்கா ரெசிஷனை தவிர்க்கும் என்று ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் உறுதியாகக் கூறினார். டோக்கியோவில் நடந்த ப்ளூம்பெர்க் நேர்காணலில் 77 வயதான பிளாக்ஸ்டோன் சிஇஓ ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் புதன்கிழமை இதைக் கூறினார்.
ஆனால் கலத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த அதிபராக வேண்டும் என்பதற்காக 3 முக்கியமான கொள்கைகளைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு வருகிறார். 1.அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதில் உறுதிப்பாட்டை என்னுடைய அரசு கொண்டிருக்கும் என வலியுறுத்தியுள்ளார், 2.வரி குறைப்புகளுக்கு உறுதியளித்தார் 3. வெளிநாட்டுப் பொருட்கள் மீது அபரிமிதமான கட்டணங்கள் விதிக்கப்படும் என்பதைத் தொடர்ந்து கூறிவருகிறார்.
இதனால் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் பணவீக்க அளவுகள் அதிகரிக்கும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர், அமெரிக்கப் பொருளாதாரம் அதிகப்படியான கடனுடன் ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்து ஸ்திரமின்மைக்கு மாறி வரும் வேளையில், இவருடைய ஆட்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனாலேயே அமெரிக்காவில் ரெசிஷன் வரும் எனப் பேச்சுக்கள் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications