இந்தியாவில் பெரும் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தை உயர்த்திய ஒரு துறையெனில் அது ஐடி சேவைத் துறை தான், கடந்த 15 வருடத்தில் ஐடி துறையில் பணியில் சேர்வது தான் இந்திய இளைஞர்களின் முக்கிய இலக்காக உள்ளது. இப்படியிருக்கும் வேளையில் இந்திய ஐடி சேவைத் துறை வேலைவாய்ப்புகளுக்கு வேட்டு வைக்க வருகிறது ஒரு குட்டி நாடு.
இந்தியாவில் மிகவும் சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பயன்படுத்தும் Reddit தளத்தில் பல முக்கியமான விவாதங்கள் நடந்து வருகிறது, அப்படி "வியட்நாம் நாட்டில் வளர்ந்து வரும் அவுட்சேர்ஸ் ஐடி வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உள்ள ஐடி வேலைகளுக்கு அச்சுறுத்தலா?" என்ற கேள்விக்குப் பல அதிரடியான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வியட்நாம் நாட்டில் மிகவும் குறைந்த தொழிலாளர் சம்பளம், விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறமை கொண்ட மக்கள் கூட்டம் மற்றும் சிறப்பான அரசு ஊக்கத்தொகைகள் என ஐடி சேவைத் துறை நிறுவனங்களை அதிகளவில் ஈர்த்து இத்துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இதனால், உலகளாவிய முக்கிய நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஒப்பந்தத் தேவைகளுக்கு இந்தியாவுக்கு மாற்று இடமாகவும், தென்கிழக்கு ஆசியாவில் புதிய ஜாக்பாட் ஆகவும் வியட்நாம் நாட்டை ஆதரித்து வருகின்றன. இதன் மூலம் இந்தியாவின் ஐடி சேவை கோட்டையை வியட்நாம் தகர்க்க துவங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த Reddit பதிவுக்கு பலர் பதில் அளித்திருந்தாலும், ஒரு சில கமெண்ட்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் முக்கியமாகக் கீழே உள்ள கமெண்ட்..
ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பொறியியல் இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், இவரின் இடத்தில் ஒருவர் வியட்நாமிய நாட்டவரை மாற்றப்பட்டு உள்ளது, அதற்குப் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த டெவலப்பர்கள் உட்பட, முழு டெவலப்மென்ட் குழுவும் வியட்நாமிய ஊழியர்களால் மாற்றப்பட்டது என்று ஒருவர் கூறியுள்ளார்.
இந்த கமெண்ட் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக உறுதி செய்யாவிட்டாலும், கடந்த 5-10 வருடத்தில் இந்தியாவில் இருந்து பிபிஓ -கேபிஓ சேவைகள் பெரும்பளவு வியட்நாம் நாட்டிற்குச் சென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறையிலும் வியட்நாம் வளர்ந்துள்ளது.
இந்தியா 1990களின் IT வளர்ச்சியிலிருந்து, இந்தியா உலகளாவிய அவுட்சோர்சிங் மையமாக வளர்ந்துள்ளது, இதில் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற முக்கிய நிறுவனங்கள் பெரும் வெற்றியைக் கண்டு இன்றளவும் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஐடி துறையில் வளர்ச்சி கண்டது மட்டும் அல்லாமல் இத்துறை வர்த்தகத்திற்காக இந்தியாவில் ஒட்டுமொத்த எகோசிஸ்டம் உருவாக்கப்பட்டது. கல்லூரியில் புதிய கணினி பாட திட்டங்கள் கொண்டு வருவது முதல் படிக்கும்போதே ஐடி கம்பெனியில் வேலைவாய்ப்பு வரையில், விசா நடைமுறைகள், வெளிநாட்டு நடப்புறவு, மென்பொருள் ஏற்றுமதி சேவையில் தனி வரி சலுகைகள் என பல தரப்பட்ட மாற்றங்களின் விளைவாக இந்திய ஐடி சேவை துறை உலகின் முடிசூடா மன்னனாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட இதே பாதையை வியட்நாம் கடைப்பிடிக்கிறது, முதல் கட்டமாக பள்ளிகளில் ஆங்கிலம் முக்கிய பாடமாகவும், மொழியாகவும் மாற்றப்பட்டு தற்போது BPO, KPO சேவைகளில் அசத்தி வருகிறது. இந்தியாவுக்கு போட்டியாக வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இப்போது சாப்ட்வேர் டெவலப்மென்ட் சேவைகளை குறைந்த செலவில் வழங்குகிறது.
இந்த மாற்றம் பல அமெரிக்க நிறுவனங்களை வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை விருப்ப குளோபல் அவுட்சோர்சிங் நாடாக மாற்றி வருகிறது. இந்த மாற்றம் இந்தியாவுக்கு கட்டாயம் பாதிக்கும்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications