வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ AI படிக்கிறதா? – பேடிஎம் நிறுவனர் விஜய் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கியமான தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ் அப் (whatsapp ) செயலி மாறி இருக்கிறது. நண்பர்களுடனும் ,குடும்பத்தினருடனும் மட்டுமில்லாமல் பணி ரீதியாகவும் தொடர்பு கொள்வதற்கான ஒரு முக்கிய செயலியாக நாம் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறோம்.

வாட்ஸ் அப்: வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்கள் அனுப்பக்கூடிய தகவல்கள் end to end encryption முறையில் அனுப்பப்படுவதால் தகவலை அனுப்புப்வோர் மற்றும் பெறுவோர் தவிர வேறு யாராலும் அந்த தகவல்களை படிக்க முடியாது தெரிந்து கொள்ள முடியாது என கூறுகிறது. ஆனால் வாட்ஸ் அப் தொழில்நுட்பம் மூலம் நாம் பகிரும் அனைத்து தகவல்களையும் தன்னுடைய மெடா ஏஐ தொழில்நுட்பம் படிக்க அனுமதி தந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ AI படிக்கிறதா? – பேடிஎம் நிறுவனர் விஜய் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

ஏஐ மூலம் மெசேஜ்களை படிக்கிறதா?: பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பகுதியில் வாட்ஸ் அப் நம்முடைய கலந்துரையாடல்களை ஏஐ படிப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். குறிப்பாக வாட்ஸ் அப் குரூப்புகளின் சேர்க்கப்படும் போது நம்முடைய குழுக்களில் பகிரப்படும் தகவல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனவே வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் பின்வரும் செட்டிங்கை மாற்றம் செய்து கொள்வது நல்லது என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

எப்படி செட்டிங்கை மாற்றுவது: வாட்ஸ் அப் குரூப்களில் இருப்பவர்கள் நிச்சயம் உங்களுடைய இந்த செட்டிங்கை மாற்றுங்கள், இல்லை என்றால் இந்த அந்த குழுவில் நீங்கள் பகிரக்கூடிய அனைத்து தகவல்களும் ஏஐ கருவிகளால் படிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். நீங்கள் வாட்ஸ் அப்பில் ஏதேனும் ஒரு குழுவில் இருக்கிறீர்கள் எனும் போது Group info என்பதை கிளிக் செய்ய வேண்டும் அதில் advanced chat privacy என்பது காட்டப்படும் அது defaultஆக off என்று தான் இருக்கும் அதை ON செய்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ AI படிக்கிறதா? – பேடிஎம் நிறுவனர் விஜய் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

என்ன நடக்கும்?: இவ்வாறு ஆன் செய்துவிட்டால் பின்வரும் மூன்று விஷயங்களை குழுவில் இருக்கக்கூடிய பயனர்களால் மேற்கொள்ள முடியாது. ஒன்று அந்த குழுவில் பகிரப்படும் எந்த ஒரு மீடியா புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றை அவர்களுடைய கேலரியில் தானாக சேமிக்க முடியாது , மேலும் அந்த கலந்துரையாடல்களை ஏஐ மூலம் சம்மரைஸ் செய்து பார்க்க முடியாது, அந்த கலந்துரையாடலை எக்ஸ்போர்ட் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளது.

வாட்ஸ் அப் விளக்கம்: இந்த advanced chat privacy என்பது குழுவில் பகிரப்படக்கூடிய மெசேஜ்கள் மற்றும் நிகழக்கூடிய கலந்துரையாடல்கள் , புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எப்படி மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதை கட்டுப்படுத்தும் ஒரு ஆப்ஷனாக இருக்கிறது. ஆனால் விஜய் சேகர் சர்மாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். WAbetainfo என்ற எக்ஸ் தள பக்கம் வெளியிட்டுள்ள பதிலில், வாட்ஸ் அப் ஏஐ கொண்டு உங்கள் தகவலை படிக்கிறது என கூறுவது தவறானது என குறிப்பிட்டு இருக்கிறது.

நீங்கள் அனுமதித்தால் மட்டுமே: Meta Ai என நீங்கள் குறிப்பிடும் தகவல்களை மட்டுமே ஏஐ படிக்கும் என்றும் message info screen பார்த்தால் உங்கள் மெசேஜை ஏஐ படித்திருக்கிறதா இல்லையா என்பது வெளிப்படையாக காட்டப்படும் என பதில் தந்துள்ளது. advanced chat privacyஎன்பதை நீங்கள் ஆன் செய்தால் உங்களால் சில ஏஐ அம்சங்களை பயன்படுத்த முடியாமல் போகலாம் என்றும் விளக்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+