ஆன்லைனில் பெரும்பாலான பணிகளை செய்துமுடிக்க ஸ்மார்ட்போன்கள் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றன. எனினும், இவை நம் தனியுரிமை மற்றும் தகவல்களுக்கு எந்நேரமும் பாதுகாப்பை அளிப்பதில்லை. இணையத்தில் உலா வரும் ஏராளமான மோசடி பேர்வழிகள் உங்களது போனின் செக்யுரிட்டியை அபகரித்து உங்களின் நடவடிக்கைகள், முக்கிய தகவல் அடங்கிய விவரங்கள் உள்ளிட்டவைகளை களவாடும் பணியை சத்தமின்றி செய்யும் வாய்ப்புகள் ஏராளம். இவ்வாறு அவர்கள் சேகரிக்கும் உங்களின் தகவல்களை கொண்டு ஆன்லைனில் இருந்தபடி பணம் சம்பாதிப்பர்.
இது குறித்து நார்டன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் பயனர்களுக்கு தலைச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது, எனினும் இதன் காரணமாக அவற்றை ஹேக் செய்யவே முடியாது என்று அர்த்தமில்லை.
மால்வேர்பைட்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எளிதில் ஹேக் செய்துவிட முடியும். ஆண்ட்ராய்டு பயனர்கள் வைத்திருக்கும் சாதனங்களில் பயனர் விவரங்களை திருடி விற்பனை செய்யும் இலக்குடன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட மால்வேர் (Malware) மற்றும் ஆட்வேர் (Adware) தொடர்ந்து அதிகரித்து வருவதாக மால்வேர்பைட்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டதா..?
உங்களது Privacy பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த, சீரான இடைவெளியில் உங்களது ஸ்மார்ட்போனின் செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தேவையற்ற பாப்-அப்கள்
தேவையற்ற அல்லது அந்தரங்க விளம்பரங்கள் மொபைல் போனின் பாப்-அப் இல் வருவதை உணர்ந்தால், ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திவிட முடியும்.
அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள்
உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து உங்களுக்கு தெரியாமலேயே அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் பதிவாகி இருப்பின், ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம்.
அதிகளவு டேட்டா பயன்பாடு
வழக்கத்தை விட உங்களின் மொபைல் டேட்டா அதிகளவில் செலவாகும் பட்சத்தில் உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம். மேலும் ஹேக்கர் உங்களது ஸ்மார்ட்போனின் இணைய வசதியை கொண்டு செயலிகளை பேக்கிரவுண்டில் இயக்கலாம்.
பேட்டரி தீர்ந்து போவது
உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக தீர்ந்து போகும் பட்சத்தில் நீங்கள் அதிக கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும்.
செயல்திறன் குறைதல்
ஸ்மார்ட்போனின் செயல்திறன் திடீரென குறைவது, ஆப்ஸ் கிராஷ் ஆவது, ஸ்கிரீன் இயங்காமல் போவது, எதிர்பாராத நேரத்தில் ரி-ஸ்டார்ட் ஆவது உள்ளிட்டவையும், உங்களின் சாதனம் ஹேக் செய்யப்பட்டிருப்பதை உணர்த்தும்.
அறிமுகமில்லாத செயலிகள்:
உங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் அறிந்திடாத செயலி ஏதேனும் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருப்பதை பார்த்தால், அது ஹேக்கரின் வேலை தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தள செயல்பாடுகள்
உங்களின் சமூக வலைத்தளம் அல்லது மின்னஞ்சல் முகவரிகளில் தேவையற்ற நடவடிக்கைகள் ஏற்பட்டு இருப்பின் ஹேக்கர் உங்களது ஸ்மார்ட்போனை இயக்கும் வசதியை பெற்றுவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது தகவல் திருட்டையும் உணர்த்தும்.
அழைப்புகள் - குறுந்தகவல்கள் நிறுத்தப்படுவது:
உங்களுக்கு அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் வரவில்லை எனில், ஹேக்கர் உங்களது சிம் கார்டை க்ளோன் செய்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications