இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ஒரே மகளான ஈஷா அம்பானி-க்கு நவம்பர் 19 ஆம் தேதி டிவின்ஸ் குழந்தைகள் பிறந்துள்ளது.
எப்படி முகேஷ் அம்பானி - நீதா அம்பானிக்கு ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி டிவின்ஸ் குழந்தைகளாகப் பிறந்தனரோ அதேபோல் ஈஷா அம்பானிக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறந்துள்ளனர்.
இணையம் முழுவதும் டிராண்டான இஷா அம்பானி குழந்தைகளின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
ஈஷா அம்பானி
ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் ஆகியோர் டிசம்பர் 2018 இல் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். 31 வயதாகும் ஈஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
ஆனந்த் பிராமல்
அதே நேரத்தில் அவரது கணவர் ஆனந்த் பிராமல், பிராமல் குழுமத்தின் நிதிச் சேவை வணிகங்களை நடத்தி வருகிறார். ஈஷா அம்பானி - ஆனந்த் பிராமல்-க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஆதியா என்றும், ஆண் குழந்தைக்கும் கிருஷ்ணா என்றும் பெயரிட்டு உள்ளனர்.
முதல் பேரன் பிருத்வி
முகேஷ் அம்பானி வீட்டில் டிசம்பர் 2020ல் ஈஷா அம்பானி உடன் பிறந்த ஆகாஷ் அம்பானிக்குப் பிருத்வி என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில் முதல் முறையாகத் தாத்தா-வான முகேஷ் அம்பானி பேரனுக்காகப் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து hamleys என்னும் பழமையான மற்றும் பாரம்பரியமான பொம்மை நிறுவனத்தை வாங்கினார்.
ஆதியா மற்றும் கிருஷ்ணா
இந்நிலையில் தற்போது ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த பிராமல் ஆகியோரின் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் சொத்து மதிப்பு என்ன என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. இதற்கான விடையைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
100 மில்லியன் டாலர்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் சொத்துக்களைத் தனது 3 பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானிக்கு பிரித்துக்கொடுக்காத நிலையில் ஈஷா அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலராக உள்ளது. இந்த 100 மில்லியன் டாலரும் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் பிராமல் சொத்து மதிப்பு
இதேவேளையில் ஆனந்த் பிராமல், பிராமல் குழுமத்தின் வாரிசாக இருக்கும் நிலையில், அவருடைய தந்தை உருவாக்கிய அஜய் பிராமல் உருவாக்கிய பிராமல் குரூப் மூலம் அஜய் -யின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் அஜய் பிராமல் இந்தியாவின் 62வது பணக்காரராக உள்ளார்.
3 அல்லது 4 பாகங்கள்
இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பை 3 அல்லது 4 பாகங்களாகப் பிரித்தால் ஈஷா அம்பானி 22 முதல் 33 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு பெறுவார். 3 ஆகப் பிரித்தால் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி பெறுவார்கள். 4 ஆகப் பிரித்தால் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி ஆகிய 3 பிள்ளைகளும், நீதா அம்பானி - முகேஷ் அம்பானியும் இணைந்து 4வது பங்கை பெற வாய்ப்புகள் உள்ளது.
ஆதியா மற்றும் கிருஷ்ணா பத்துமதிப்பு
இதன் மூலம் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த பிராமல் ஆகியோரின் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் சொத்து மதிப்பு 25 முதல் 35 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதில் பிராமல் குரூப் தலைவர் அஜய் பிராமல் சொத்து மதிப்பான 3 பில்லியன் டாலரும் அடக்கம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications