ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ரீடைல் வர்த்தகச் சந்தையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் ரீடைல் சந்தையில் குறிப்பாக FMCG பிரிவில் சொந்த பிராண்டில் நேரடியாக மக்களுக்குத் தனது பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு வந்தது.
தற்போது இப்பிரிவு விற்பனைக்காக Independence எனப் புதிய பிரானண்ட்-ஐ உருவாக்கியுள்ளது.
ஈஷா அம்பானி
ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் தலைவரான ஈஷா அம்பானி, முகேஷ் அம்பானி வழிகாட்டுதலின் படி கடந்த ஒரு வருடத்தில் உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ், குளிர்பானம், வீட்டில் தினசரி பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்களையும், பிராண்டுகளையும் கைப்பற்றி ஒரு முழு FMCG நிறுவனத்திற்கான கட்டமைப்பை உருவாக்கி தற்போது புதிய பிராண்ட் பெயருடன் களத்தில் இறங்கியுள்ளது.
FMCG துறை
இந்தியாவில் FMCG துறை மிகப் பெரியது மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. இதனால் விலை போர்-ம் உண்டு, தர மேம்பாட்டுப் போர்-ம் வருடத்தின் 365 நாட்களுக்கும் இருக்கும். இதனால் மக்களைக் கவரும் நிறுவனங்களுக்குத் தொடர்ந்து வர்த்தகமும், வாய்ப்பு உள்ளது.
Independence பிராண்ட்
இதன் அடிப்படையில் தான் இந்தியாவில் ஏற்கனவே பல FMCG பிராண்டுகள் இருந்தும் ஈஷா அம்பானி இத்துறையில் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உடன் Independence என்ற பிராண்ட் பெயர் உடன் மக்களுக்குத் தினசரி தேவைப்படும் பொருட்கள் முதல் பிராசஸ் செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
குஜராத்
இந்தப் பிராண்ட் பொருட்களை முதல் கட்டமாக முகேஷ் அம்பானி-யின் சொந்த மாநிலமான குஜராத்-ல் தான் அறிமுகம் செய்ய உள்ளது, இதன் பின்பு உற்பத்தி, சப்ளை செயின் என அனைத்தையும் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய உள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.
முக்கியப் பொருட்கள்
எங்களுடைய புதிய மற்றும் சொந்த FMCG பிராண்டான INDEPENDENCE-ஐ அறிமுகம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். INDEPENDENCE பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், தானியங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் பிற அன்றாடத் தேவைப் பொருட்களை உயர்தரத்தில், அதே நேரத்தில் மலிவு விலையில் சந்தைப்படுத்த உள்ளோம் என ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் இயக்குநர் ஈஷா அம்பானி கூறினார்.
45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகஸ்ட் மாதம் நடந்த இந்நிறுவனத்தின் 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக FMCG சந்தையில் நுழைவது குறித்து அறிவித்தார். ரிலையன்ஸ்-ன் INDEPENDENCE பிராண்ட் ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடிசி நிறுவனங்களுடன் நேருக்குநேர் மோத உள்ளது.
அன்றாடத் தேவை
மேலும் இக்கூட்டத்தில் ஒவ்வொரு இந்தியரின் அன்றாடத் தேவைகளையும் தீர்க்கும் உயர்தர, மலிவு விலையில் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ரிலையன்ஸ் FMCG வர்த்தகத்திற்குள் நுழைவதாக இக்கூட்டத்தில் ஈஷா அம்பானி கூறினார்.
ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ்
மார்ச் 31, 2022 உடன் முடிந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் சுமாப் 1.99 லட்சம் கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டு சுமார் 7,055 கோடி ரூபாயை மொத்த லாபமாகக் கொண்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் பிராண்ட்ஸ்
ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் கீழ் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ரிலையன்ஸ் ஸ்மார்ட், ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயிண்ட், ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோமார்ட் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர், ரிலையன்ஸ் டிரென்ஸ், ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ், 7-ELEVEN, ப்ராஜெக்ட் ஈவ், டிரென்ஸ் புட்வேர், ரிலையன்ஸ் ஜூவல்ஸ், AJIO, ஹாம்லிஸ், ரிலையன்ஸ் பிராண்ட்ஸ், ரிலையன்ஸ் மால், தற்போது புதிதாக INDEPENDENCE பிராண்ட்-ம் சேர்ந்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications