குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 ஆம் தேதிவரை நடைபெற்ற ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள் ஒரு கோவில் திருவிழாவுக்கு இணையாக நடைபெற்றன.
பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் தங்களது சிறந்த மற்றும் விலையுயர்ந்த ஆடைகளை உடுத்தி, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் விழாவில் கலந்துக்கொண்ட அனைவரும் அவர்களுக்கு விருப்பமான பாரம்பரிய பாணியில் நகைகளை அணிந்திருந்தபோது, கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி கொஞ்சம் ஸ்பெஷல்.
ஈஷா அம்பானி மிகவும் புதுமையாக வைரம், மரகதம், மாணிக்கக் கற்கள் உள்ளிட்ட பல விலைமதிப்பற்ற கற்கள் அடங்கிய ஜடாவ் நகைகளால் செய்யப்பட்ட ஜாக்கெட் அணிந்திருந்தார்.

பிரபலங்களுக்கு ஆடை தயாரித்த வடிவமைப்பாளர்களான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் பகிர்ந்துள்ள வீடியோவில், அந்த நகைகள் ஈஷாவின் "தனிப்பட்ட சேகரிப்பில்" இருந்து வந்தவை என்று சந்தீப் விளக்கினார்.
வடிவமைப்பாளர்கள் சிவப்பு துணியை அடித்தளமாகப் பயன்படுத்தி, அதில் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களால் அலங்கரித்து ஜாக்கெட் தைக்கப்பட்டது. இந்த உடை தான் தற்போது இந்தியாவே பேசி வருகிறது குறிப்பாக இளம் பெண்கள் மெய்மறந்து பார்த்து வருகிறார்கள்.
"ஈஷா தனக்குச் சொந்தமான அனைத்து சிறிய ஜடாவ் நகைகளையும் கொடுத்தார்," என்று சந்தீப் மேலும் கூறினார், அவரது ஜாக்கெட்டில் போல்கி, ரூபி, வைரங்கள், மரகதங்கள் உள்ளன.

இதில் சில கற்கள் அவரது தனிப்பட்ட சேகரிப்புக்கு சொந்தமானது. அத்துடன் புதிய நகைகள் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து குறிப்பாக ஆடையில் தைக்க பெறப்பட்டன. ஒவ்வொரு நகையும் முதலில் கையால் வரையப்பட்ட காகித வடிவங்களில் பேட்டர்ன் செய்யப்பட்டு அதன் பின்பு ஜாக்கெட்டில் பதிக்கப்பட்டன.
பல்வேறு கலைப் பரிசோதனைகளுக்குப் பிறகு, தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட சர்தோசி வேலைப்பாடுகளுடன் ஈஷாவின் ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டது.

திருமணத்துக்கு முந்தைய விழாக்கள் ரிஹானாவின் கச்சேரியுடன் தொடங்கியது. இது ஏறக்குறைய ஏழு ஆண்டுகளில் அவரது முதல் நிகழ்ச்சியாகும். அடுத்தடுத்த நாட்களில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் மேடையில் ஒன்றாக நடனமாடியபடி நிகழ்ச்சியை கவர்ந்தனர்.
விழாக்களில் தில்ஜித் டோசன்ஜ் ஒரு நேரடி நிகழ்ச்சியை வழங்கினார். அதைத் தொடர்ந்து சர்வதேச பாப்ஸ்டார் எகான் கச்சேரி நடைபெற்றது.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications