கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியும் தொழிலதிபருமான இஷா அம்பானி தனது சகோதரர் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய மெஹந்தி அலங்கார சடங்கில் கண்கவர் கடற்பச்சை மற்றும் பிங்க் நிற லெஹங்காவில் தோன்றி அனைவரையும் கவர்ந்தார்.
இந்த மெஹந்தி சடங்கின்போது இஷா அணிந்திருந்த தங்க ஜிமிக்கி, வளையல்கள், வைரங்கள் பதித்த ஒட்டியாணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரி இஷா அணிந்திருந்த பிரமாண்டமான பச்சை நிற மரகதக் கல் நெக்லஸ் இருந்திருந்தது.

இந்த நெக்லஸ் இஷாவின் தாயார் நீதா அம்பானியுடையது. மெஹந்தி சடங்குக்காக அம்மாவிடம் இரவல் கேட்டு வாங்கியிருந்தார் இஷா. 2023இல் இஷா முகேஷ் அம்பானி கல்சுரல் சென்டர் திறப்பு விழாவின் போது இந்த மரகதக் கல் நெக்லஸை வாங்கி நீதா அம்பானி அணிந்திருந்தார். சாதாரண குடும்பங்களில் இதுபோன்று தங்களது உறவினர்களிடம் நகைகள், ஆபரணங்களை இரவல் பெற்று சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இந்தியப் பெண்களிடம் சகஜம்.

ஆனால் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் குடும்பப் பெண்களுக்கும் இந்தப் பழக்கம் இருப்பதை தெரிந்து மக்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். ஆனந்த் அம்பானி திருமணத்தை முன்னிட்டு ஏழைக்குழந்தைகள் படிக்கும் ஸ்வாமி விவேகானந்தர் வித்யாமந்தீரில் ஒரு நிகழ்ச்சியை முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் நடத்தினர்.

இதனிடையே ஜூலை 3 ஆம் தேதியன்று குஜராத்தி பாரம்பரிய திருமண சடங்கான மாமெரு நிகழ்ச்சியை அம்பானி குடும்பத்தினர் வெகு சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது மணமகனின் தாய்மாமன் தனது மருமகனுக்கு பிடித்த இனிப்புகள் மற்றும் பரிசுகளை நிறைய கொண்டு வந்து தருவார். ஹிந்து பாரம்பரிய முறைப்படி வழக்கமான சடங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது. ட

ஜூலை 12 ஆம் தேதியன்று திருமணம் நடைபெறுகிறது. 13 ஆம் தேதியன்று சுப ஆசிர்வாதம் நிகழ்ச்சியும் 14 ஆம் தேதியன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்துடன் திருமண நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.


Story written by: jayachandran


Click it and Unblock the Notifications