முதல் முறையாக வீட்டிற்கு வந்த இரட்டை வாரிசுகள்.. குழந்தைகளுடன் மும்பை வந்த இஷா அம்பானி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் செல்ல மகள் தான் இஷா அம்பானி. கடந்த மாதம் தான் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு குழந்தை ஆண். மற்றொரு குழந்தையாகும்.

ஆதியா மற்றும் கிருஷ்ணா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த குழந்தைகள், இருபெரும் வணிக சாம்ராஜ்ஜியங்களின் வாரிசுகளாகும்.

இருபெரும் வணிகர்களின் வாரிசுகள்

இருபெரும் வணிகர்களின் வாரிசுகள்

கடந்த 2018ம் ஆண்டில் தான் முகேஷ் அம்பானி நீதா அம்பானியின் செல்ல மகள் இஷா அம்பானிக்கும், பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமல் மற்றும் சுவாதி பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் திருமணம் நடந்தது. இந்த இருபெரும் வணிகர்களின் வாரிசுகளுக்கு நவம்பர் 19 அன்று இரட்டை குழந்தைகள் பிறந்தன.

முதல் முறையாக மும்பை

முதல் முறையாக மும்பை

இந்த குழந்தைகள் கடந்த மாதம் பிறந்தாலும் முதன் முறையாக தங்களது வீட்டிற்கு முதல் முறையாக இன்று அழைத்து வரப்பட்டன. இஷா அம்பானிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் இரண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இரட்டை குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இந்த நிலையில் இன்று குழந்தைகள் பிறந்ததற்கு பிறகு முதன் முறையாக மும்பை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் அம்பானியின் குடும்பத்தினர்

விமான நிலையத்தில் அம்பானியின் குடும்பத்தினர்

இஷா அம்பானியுடன் அவரது கணவர் ஆனந்த் பிரமலும் காணப்பட்டார். இந்த வணிக வாரிசுகளை,தங்களது செல்ல பேரனை வரவேற்க அம்பானி குடும்பத்தினரின், முழு குடும்பமும் விமான நிலையத்திற்கு வந்ததுள்ளதை இணையத்தில் பரவி வரும் வீடியோக்கள், போட்டோக்கள் மூலமாகவும் பார்க்க முடிகிறது.

பிரமல் குடும்பத்தினர் அறிக்கை

பிரமல் குடும்பத்தினர் அறிக்கை

இது குறித்து பிரமல் குடும்பத்தினர், கடவுளின் அருளால் எங்கள் குழந்தைகளான ஆனந்தும், இஷாவும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஆதியா மற்றும் கிருஷ்ணா இருவரும் மிக ஆரோக்கியமாக உள்ளனர். இந்த ஒரு அழகிய தருணத்தில் நாங்கள் உங்கள் ஆசீர்வாதத்தினை விரும்புகிறோம். இந்த முக்கியமான நெகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆகாஷ் அம்பானி &  ஆனந்த் அம்பானி

ஆகாஷ் அம்பானி & ஆனந்த் அம்பானி

இந்த வரவேற்பு விழாவில் அம்பானியின் செல்ல மகன்களான ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, அஜய் பிரமல் என இரு வணிக சாம்ராஜ்ஜியங்களின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உள்ளனர்.

டிசம்பர் 25ம் தேதி இந்த வணிக குடும்பத்தில் சில விழாக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

300 கிலோகிராம் தங்கமா?

300 கிலோகிராம் தங்கமா?

இதில் சுவாரஷ்ய தகவல் என்னவெனில் இந்த விழாவில் 300 கிலோகிராம் தங்கம் நன் கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும், இந்தியா முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோவிகளில் உள்ள பூசாரிகள் நாளை இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

கோலகமாக நடந்த திருமணம்

கோலகமாக நடந்த திருமணம்

ஆனந்த் பிரமல், இஷா அம்பானிக்கு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும், அமெரிக்க முதல் பெண்மணியுமான ஹிலாரி கிளிண்டன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ரத்தன் டாடா, பச்சன் குடும்பத்தினர், ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+