ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் முகேஷ் அம்பானியின் 15.7 டிரில்லியன் பிசினஸ் சாம்ராஜ்யத்துடன் கொடிகட்டி மிகச்சிறப்பாக செயல்படும் நிறுவனமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் நிகர மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. கடந்த சில மாதங்களில் பல புதிய பிராண்டுகளை இந்தியச் சந்தையில் ரிலையன்ஸ் ரீடைல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்லின் தலைவராக ஈஷா அம்பானியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து விரிவாக்கத்தில் கடுமையாக ஈடுபட்டார் ஈஷா அம்பானி.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ஜவுளி பிரிவான கவர் ஸ்டோரி குளோதிங் ஒரு புதிய பேஷன் பிராண்டை அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் ஃபௌண்டரி (Foundry). இந்த பிராண்டு மூலம் அர்பானிக், டாடாவின் ஜூடியோ மற்றும் பல பிராண்டுகளுடன் நேருக்கு நேர் மோத அம்பானி குடும்பம் திட்டமிட்டு உள்ளது.
ஃபௌண்டரி பிராண்ட் கீழ் விற்பனை செய்யப்படும் ஆடைகளின் சராசரி விற்பனை விலை ரூ.1000 என ஈஷா அம்பானி நிர்ணயித்துள்ளார்.
ரிலையன்ஸின் அஜியோ பிராண்டு மூலம் மலிவான விலையில் ஆடைகளையும் ஆக்சஸரிகளையும் விற்கின்றனர். இந்த நிலையில் மாஸ் மார்கெட்டை கைப்பற்றும் வகையில் Foundry துவங்கப்பட்டு உள்ளது.
பிக்யூ பிரைம் சேனலுக்கு கவர் ஸ்டோரி குளோதிங் சிஇஓ மஞ்சுளா திவாரி அளித்த பேட்டியில், ஃபௌண்டரி மூலம் 50 புதிய ஸ்டைல்களை தினமும் அறிமுகப்படுத்துவோம். இதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் 6000 ஸ்டைல்களை வைத்திருப்போம்.
கடந்த சில மாதங்களில் ரிலையன்ஸ் ரீடைல் அறிமுகப்படுத்திய இரண்டாவது குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஆடை பிராண்ட் இதுவாகும். அண்மையில் யூஸ்டா என்ற பிராண்டையும் ரிலையன்ஸ் ரீடைல் அறிமுகப்படுத்தி இருந்தது.
ரிலையன்ஸ் ரீடெய்லின் தற்போதைய மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜிம்மி சூ, ஜார்ஜியோ அர்மானி, ஹூகோ பாஸ், வெர்சேஸ், மைக்கேல் கோர்ஸ், ப்ரூக்ஸ் பிரதர்ஸ், அர்மானி எக்ஸ்சேஞ்ச், பர்பெர்ரி மற்றும் உலகளாவிய பெரிய பிராண்டுகள் ரிலையன்ஸ் ரீடெய்லுடன் பார்ட்னர் பிராண்டுகளாக இந்தியாவில் கிடைக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் ஈஷா அம்பானி கூறுகையில், ரிலையன்ஸ் ரீடைல் கடந்த வருடத்தில் 3300 கடைகளைத் திறந்துள்ளதாகக் கூறினார். 8 கோடி மக்கள் கடைகளுக்கு நேரடியாக வந்துள்ளதாகவும், 100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுடன், ரிலையன்ஸ் ரீடைல் இந்தியாவின் டாப் 10 சில்லரை வணிக நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். உலகளாவிய டாப் 100 பட்டியலில் உள்ள ஒரே இந்திய சில்லறை விற்பனையாளர்.
இந்த மைல்கல்லை எட்ட கடந்த 2 ஆண்டுகளில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ரூ.82,646 கோடி முதலீடு செய்துள்ளது. அனைத்து கையகப்படுத்துதல்கள், முதலீடுகளுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ரீடைல் தற்போதைய ஸ்டோர் எண்ணிக்கை 18,040 ஆக உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications