ஈஷா அம்பானி-யின் ஸ்மார்ட்டான ஐடியா.. ரிலையன்ஸ் சென்ட்ரோ புதிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்..!

இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக ஒரு வர்த்தகத்தைத் திறந்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக ஆடை பிரிவில் புதிய வர்த்தகத்தைத் திறந்துள்ளது.

இது இந்தப் பண்டிகை காலம் மட்டும் அல்லாமல் வருடம் முழுவதும் ஆடை விற்பனையில் பெரும் மாற்றத்தைச் செய்ய உள்ளது.

 டிபார்ட்மென்டல் ஸ்டோர்

டிபார்ட்மென்டல் ஸ்டோர்

மளிகை பொருட்களுக்கு எப்படி டிபார்ட்மென்டல் ஸ்டோர் இருக்கிறதோ, அதே பாணியில் ஆடைகளுக்கு ஒரு டிபார்ட்மென்ட்ல் ஸ்டோரை ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் திறந்துள்ளது. இது கட்டாயம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களுக்கான டிபார்ட்மென்டல் ஸ்டோர்-ஐ ரிலையன்ஸ் சென்ட்ரோ (Reliance Centro) என்ற பெயரில் துவங்கியுள்ளது. இந்தப் பிராண்டின் முதல் கடை டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் திறக்கப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் சென்ட்ரோ

ரிலையன்ஸ் சென்ட்ரோ

ரிலையன்ஸ் சென்ட்ரோ (Reliance Centro) மூலம் பேஷன் துறையை ஜனநாயகப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கிறோம். ஆடை, காலணி, காஸ்மெட்டிக்ஸ், உள்ளாடைகள், ஸ்போர்ட்ஸ் வியர், லக்கேஜ் முதல் அனைத்து பேஷன் பொருட்களும், சுமார் 300 இந்திய மற்றும் வெளிநாட்டு பிராண்டு பொருட்களை ஓரே இடத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி

டெல்லி

டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் சென்ட்ரோ மிகவும் பிரம்மாண்டமாகவும், உயர் தர ஆடைகளும், அமைப்புகளையும் கொண்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஆடை மற்றும் பேஷன் பொருட்களை ஓரே இடத்தில் பெரும் வசதிகளைக் கொண்டு உள்ளது.

சிறப்பு அறிமுகத் தள்ளுபடி

சிறப்பு அறிமுகத் தள்ளுபடி

ரிலையன்ஸ் சென்ட்ரோ முதல் கடை சுமார் 75000 சதுரடியில் அமைந்துள்ளது. மேலும் அறிமுகத் தள்ளுபடியாக 4000 ரூபாய்க்குப் பொருட்களை வாங்கினால் 1500 ரூபாய் தள்ளுபடியும், 5000 ரூபாய்க்கு வாங்கினால் 2000 ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பண்டிகை காலத்தில் டெல்லி மக்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+