மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பிரிட்டனின் முன்னணி ஃபேஷன் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி பிரிட்டனை சேர்ந்த ஆன்லைன் ஃபேஷன் நிறுவனமான ஏசோஸின் (ASOS) பொருட்களை இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
இருநிறுவனங்களுக்கும் இடையே போடப்பட்டுள்ள இந்த நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏசோஸின் ஃபேஷன் பொருட்களை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்ய உள்ளது.

குறிப்பாக பிரத்யேக கடைகள் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள கடைகளில் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் ஆகியவற்றில் இனி ஏசோஸின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் பிரிட்டனை சேர்ந்த ஃபேஷன் பொருட்களை நாம் இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடைல் வாயிலாக நேரடியாக வாங்கிக் கொள்ள இயலும்.
முதன்முறையாக ஏசோஸ் நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் இத்தகைய ஒரு பிரத்தியேக ஒப்பந்தத்தை போட்டுள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இவர் சர்வதேச அளவிலான நிறுவனங்களின் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும், அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய ஒரு தளத்தில் அவை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
ஏசோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜோஸ் ஆண்டோனியோ அமோஸ் உலக அளவில் தங்களது நிறுவனம் சென்று சேர வேண்டும் அந்த வகையில் இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் இணைந்து எங்களது பேஷன் பொருட்களை விற்பனை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளார். ஏசோஸ் டிசைன் உலகிலேயே மிகப்பெரிய ஒரு ஃபேஷன் பிராண்ட் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரக்கூடிய சில்லறை வர்த்தக நிறுவனம் என டெலாய்ட் குளோபல் பவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்.
இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கிட்டத்தட்ட 249 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மளிகை சாமான், எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள், என பல்வேறு துறைகளிலும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கால் பதித்துள்ளது.
இந்நிறுவனம் 2022-23 ஆம் நிதியாண்டில் 2,60,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது . 2023 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கிட்டத்தட்ட 7000 நகரங்களில் 18,040 கடைகளை நிறுவி இருக்கிறது.
Story Written by: Devika
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications