இந்தியா மற்றும் ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர், உலகின் 9வது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்தக் குழந்தைகளுக்குக் கிருஷ்ணா மற்றும் ஆதியா என்று பெயரிடப்பட்டு உள்ளனர். இந்திய வர்த்தக உலகில் மிகவும் பிசியான பெண்ணாக இருக்கும் ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் என்ற மிகப்பெரிய வர்த்தகப் பிரிவின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவர்.
ஈஷா அம்பானி-யின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கு அளவில் உள்ளது மட்டும் அல்லாமல், அம்பானி குடும்பத்தில் இருந்து முதல் பெண்....
ஈஷா அம்பானி
ரீடைல் சந்தையில் மிகப்பெரிய போட்டி உருவாகியிருக்கும் வேளையில் ஈஷா அம்பானி கடந்த 2022ல் மட்டும் சுமார் 10 பிராண்ட் கடைகளைத் திறந்து வர்த்தகத்தின் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நிலையில் இரட்டை குழந்தையைப் பெற்றுள்ளார்.
ரிலையன்ஸ் ரீடைல்
இதனால் அடுத்த சில மாதங்களுக்கு ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானியின் நிர்வாக அணியின் வாயிலாக இயக்கப்பட உள்ளது.
ஈஷா அம்பானி-யின் வளர்ச்சி வர்த்தகச் சந்தையில் மட்டும் அல்லாமல் அம்பானி குடும்பத்திலும் முக்கியமானதாக விளங்குகிறது. ஏன் தெரியுமா..?
100 மில்லியன் டாலர் சொத்து
100 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட ஈஷா அம்பானி தான் முதல் பெண்ணாக அம்பானி குடும்பத்தில் நிர்வாகப் பொறுப்பிற்கு வந்தவர் என்றால் மிகையில்லை. மில்டி பில்லியன் டாலர் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இதுவரையில் பெண்கள் யாருமே முக்கியமான நிர்வாகப் பதவிகளில் இருந்தது இல்லை.
அம்பானி குடும்பப் பெண்கள்
திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி துவங்கி, அவரது பெண் பிள்ளைகளை, நிதா அம்பானி, மருமகள் ஸ்லோகா மேத்தா வரையில் யாருமே வர்த்தகத்தில் நிர்வாகப் பதவிக்கு வந்தது இல்லை.
ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி
ஆனால் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானிக்கு இணையாகக் கல்வி, நிர்வாகம், பதவிகள் வரையில் அனைத்திலும் இணையாகவும், ஒரு படிக்கு மேல் இருக்கிறார் என்றால் மிகையில்லை. இதற்கு ஏற்றார் போல் முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானிக்கு ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் தலைவர் பதவி கொடுத்துள்ளார்.
கோகிலாபென் அம்பானி
திருபாய் அம்பானி-யின் கடுமையான வர்த்தகப் பாதையில் அவருடைய மனைவி கோகிலாபென் அம்பானி உறுதுணையாக இருந்தாலும், நிர்வாகப் பதவிகளில் இருந்தது இல்லை. கோகிலாபென் அம்பானி வீட்டையும், பிள்ளைகளை மட்டுமே கவனித்து வந்தார். ஆனால் திருபாய் அம்பானியின் மறைவிற்குப் பின்பு கோகிலாபென் அம்பானி ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கக் காரணமாக இருந்தவர் என்பதை மறுக்க முடியாது.
திப்தி மற்றும் நினா
இதேபோல் திருபாய் அம்பானி மற்றும் கோகிலாபென் அம்பானி ஆகியோரின் பெண் பிள்ளைகளான திப்தி மற்றும் நினா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்திற்குள் வரவே இல்லை. திப்தி சல்கோகர் வி.எம்.சல்கோகர் கார்ப்பரேஷன் பிரைவேட்டின் தலைவரான தத்தராஜ் வி.சல்கோகரை மணந்தார். கோத்தாரி சுகர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மறைந்த ஷியாம் கோத்தாரியை நினா கோத்தாரி மணந்தார்.
சொத்துக்கள்
சொல்லப்போனால் திப்தி மற்றும் நினா ஆகியோர் தனது தந்தை திருபாய் அம்பானி சொத்துக்களைக் கூடச் சரி சமமாகப் பெறவில்லை, திருபாய் அம்பானி மறைவிற்குப் பின்பு முகேஷ் அம்பானி, அனில் அம்பானிக்கு மத்தியில் யாருக்கு எந்த வர்த்தகம், சொத்துக்கள் குறித்த தகராறு அதிகமாக இருந்த போது கூடத் திப்தி மற்றும் நினா ஆகியோர் எவ்விதமான உரிமை கோரல்களைச் செய்யவில்லை.
நீதா அம்பானி
மேலும் முகேஷ் அம்பானி நீதா அம்பானி காமர்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவராக இருந்தாலும், இதுவரையில் நேரடியாக எவ்விதமான வர்த்தகப் பிரிவின் நிர்வாகப் பதவிகளிலும் இல்லை. ரிலையன்ஸ் பவுண்டஷன், ஐபிஎல் அணி மும்பை இந்தியன்ஸ் அணி பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் லீடர்ஷிப் பதவிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷா அம்பானி
இந்த நிலையில் ஈஷா அம்பானி தான் அம்பானி குடும்பத்தில் முதல் பெண்மணியாக நேரடி நிர்வாகப் பொறுப்பில் வந்தவர். அனில் அம்பானி-யில் குழுமத்தில் கூட அவருடைய மனைவி டீனா அம்பானி எவ்விதமான நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதா அம்பானி வளர்ப்பு
ஈஷா அம்பானி தனது தாய் வளர்ப்பில் ஆரம்பம் முதல் நிர்வாகம், பிஸ்னஸ் ஆகியவற்றின் புரிதல் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வர்த்தகத்துடன் நெருங்கி இருக்க வைத்தார். இதன் மூலம் பள்ளி படிப்பை முடித்த பின் ஸ்டான்போர்டு பிஸ்னஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதைத் தொடர்ந்து மெக்கென்சி நிறுவனத்தில் சில வருடம் பணியாற்றிய பின்பு இந்திய வந்த கையோடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழுவில் ஆகாஷ் அம்பானி உடனே சேர்ந்தார். ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பக் கட்ட பணிகளிலும், ரிலையன்ஸ் ரீடைல் டிஜிட்டல் மற்றும் விரிவாக்கத்தைத் தனி ஆளாக நிர்வாகம் செய்தார்.
முகேஷ் அம்பானி கொடுத்த ஆபீஸ்
சமீபத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகத்தில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானிக்கு தனி அலுவலகம் மற்றும் நிர்வாகக் குழுவை அளித்தார். இதன் பின்பு தான் பல புதிய வர்த்தக அறிவிப்புகளும், விரிவாக்கங்களும் அறிவிக்கப்பட்டது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications