இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி - ஈஷா அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் அழகு சாதன மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பிரிவான திரா (Tira), உலகளாவிய புகழ்பெற்ற ஆடம்பர தோல் மற்றும் தலைமுடி பராமரிப்பு பிராண்டான ஆகஸ்டினஸ் பேடர் (Augustinus Bader) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
உலகளாவிய புகழ்பெற்ற ஸ்டெம் செல் மற்றும் பயோமெடிக்கல் விஞ்ஞானி பேராசிரியர் ஆகஸ்டினஸ் பேடர் நிறுவிய இந்த பிராண்ட், இனி இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் Tira-வில் மட்டுமே கிடைக்கும் வகையில் இந்தியாவுக்கான ஒட்டுமொத்த பிரான்சைஸ்-ஐ எடுத்துள்ளது. மக்கள் இனி Augustinus Bader பொருட்களை மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு முழுவதும் உள்ள TIRA கடைகளில் இனி வாங்க முடியும்.

ஒருபக்கம் டாடா குழுமம் பட்ஜெட் விலையில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இந்தியா முழுவதும் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் Zudio பிராண்டின் கீழ் புதிய துணை பிராண்டாக Zudio Beauty அறிமுகம் செய்யப்பட்டு இன்று பெங்களூரில் முதல் கடை திறக்கப்பட்டு உள்ளது. மறுபக்கம் ரிலையன்ஸ் ஆடம்பர பொருட்களை நுகரும் வாடிக்கையாளர்களை ஈர்க்க Augustinus Bader போன்ற ஆடம்பர பிராண்டுகளை கொண்டு வந்துள்ளது.
திரா ஆகஸ்டினஸ் பேடர் தொகுப்பை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு நிபுணர் வழிகாட்டலையும் வழங்கும், அவர்களின் தனிப்பட்ட தோல் பராமரிப்பு தேவைகளின் அடிப்படையில் சரியான தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க உதவும் சேவையும் அளிக்க உள்ளது.
திராவின் இணை நிறுவனர் பக்தி மோடி, Augustinus Bader அறிமுகத்தைப் பற்றி பேசும் போது இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உலகளாவிய மற்றும் இந்திய பிராண்டுகளின் கொண்டு வரும் முயற்சியில் முக்கியமானதாக Augustinus Bader அறிமுக இருக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் காஸ்மெட்டிக்ஸ் சந்தை 2025 ஆம் ஆண்டிற்குள் 20 பில்லியன் டாலர்களுக்கு வளர உள்ளது, இதில் ப்ரீமியம் ஆடம்பர பிரிவு ஒவ்வொரு வருடமும் 15% அதிகரிப்பைச் சந்தித்து வருகிறது. யூரோமோனிட்டர் மதிப்பீடுகள், ஆடம்பர காஸ்மெட்டிக்ஸ் ரீடைல் விற்பனையாளர்கள், ஆன்லைன் தளங்களுடன் இணைந்து, கிளீன் பியூட்டி, தோல் பராமரிப்பு மற்றும் AI சார்ந்த அழகுசாதனப் பொருட்கள் போன்ற அனைத்தையும் விற்கத் துவங்கியுள்ளதால் உலகம் முழுவதும் நுகர்வு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தோல் பராமரிப்பு தயாரிப்புகள் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது, 2027 ஆம் ஆண்டிற்குள் 6.25% CAGR அடிப்படையில் வளர்ந்து 8.84 பில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற தான் திரா, நைக்கா, டாடா கிளிக் பலெட், மைந்திரா என பல முன்னணி பிராண்டுகள் போட்டியிடுகிறது.


Click it and Unblock the Notifications