நாட்டின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி என்றால் சும்மாவா? பெரும் சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானி, அவரது பிள்ளைகளையும் ஆடம்பர வாழ்க்கை நுழைய வைத்து அவர்களையும் உயர்த்தியுள்ளார். அவரது இரு மகன்கள் மற்றும் மகள் ஈஷா அம்பானி ஆகியோர் இப்போது வளரும் தொழிலதிபர்களாக வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஈஷா அம்பானி தனக்கென தனி அடையாளமாய் நிகழ்ச்சி ஒன்றில் வைர காதணி ஒன்றை அணிந்து கலந்து கொண்டுள்ளார். அதன் விலை ரூ.141 கோடியாம்.
பொதுவாக ஈஷா அம்பானியின் நகை கலெக்ஷன்களுக்கு போட்டியாக யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நகைகள் சேர்ந்து வைத்துள்ளது. இவருடன் போட்டியிட அவரது தாயார் நீதா அம்பானியால் மட்டுமே முடியும். ஈஷாவின் மிகச்சிறந்த கலெக்ஷன்களை அவரது இளைய சகோதரர் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் போது அணிந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதற்கிடையில் சமீபத்தில், ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஈஷா தனது மிகப்பெரிய சேகரிப்பில் இருந்து 50 காரட் வைர காதணிகள் மற்றும் ஒரு மோதிரத்தை அணிந்திருந்தார். அதன் விலை சுமார் ரூ.141 கோடி என கூறப்படுகிறாது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் சேனலில் பிரபலங்களின் நகைகளைப் பற்றிப் பேசும் துருமித் மெருலியா என்ற நகைக்கடைக்காரர் வைர ஆபரணங்களை மதிப்பாய்வு செய்துள்ளார். இதற்கு முன்பு ஈஷா அம்பானி அவரது திருமணத்தில் 50 காரட் அல்லது அதற்கும் அதிகமான வைரங்களை அணிந்திருந்தாலும், அது வழக்கமாக நெக்லஸ்கள் அல்லது டிராப் காதணிகளாக மட்டுமே இருந்ததாகவும், இவ்வளவு பெரிய காதணிகள் இல்லை என்றும் இவ்வளவு பெரிய வைர காதணிகள் பொருத்தப்படும் என்று இதுவரை தான் கண்டதில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் என்பதால் , ஈஷா அம்பானியிடம் சில பெரிய வைரங்கள் உள்ளன. ஆனால் துருமித் மெருலியா கூற்றுப்படி, ஈஷா அம்பானி வைத்து வைரக் கட்டிகள் என்னவென்று தெரியவில்லை என்றும், அவர் ஷோருமில் வைத்துள்ள வைர காதணிகள் ஒவ்வொன்றும் 50 காரட்கள்தான் ஆனால் ஒரு நகைக்கடைக்காரராக இருந்தாலும் பெரிய வைரங்களை ஸ்டட்களில் பொருத்த முடியும் என்று எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இதன் மதிப்பு ரூ.141 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஈஷா அம்பானி நகைகள் குறித்த சர்ச்சையில் இது முதல் முறையல்ல. ஒருமுறை 14 காரட் குஷன் வெட்டப்பட்ட வைரத்தை தலைமுடியில் அணிந்திருந்தார். அவரது சகோதரர் அனந்தின் திருமண விழா ஒன்றில் அவர் அணிந்திருந்த நவரத்னா நெக்லஸ் அவரது சேகரிப்பில் இருந்து கண்ணைக் கவரும் மற்றொரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த நெக்லஸில் இந்திய ஜோதிடத்தின் ஒன்பது விலையுயர்ந்த கற்கள் இடம்பெற்றன. அதில், ரூபி, மரகதம், சபையர், மஞ்சள் சபையர் (pukhraj), வைரம், முத்து, பவளம் (moonga), ஜேட் மற்றும் ஹெசோனைட் (gomed) ஆகியவை இருந்தன.


Click it and Unblock the Notifications