மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய ஆசை மகள் தான் ஈஷா அம்பானி. ஈஷா அம்பானிக்கும் பிரபல தொழிலதிபரின் மகனான ஆனந்த் பிராமலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்றும் பெண் குழந்தைக்கு ஆதியா என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இவர்களுக்கு விரைவில் மூன்று வயது நிறைவடைய இருக்கிறது. இதனை அடுத்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பணிகளை ஈஷா அம்பானியும் ஆனந்த் பிராமலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணாவை மும்பையில் இருக்கும் வெஸ்ட் விண்ட் (WEST WIND) பள்ளியில் சேர்த்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மும்பையில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு பள்ளி இது ஆகும். கடந்த 1947 ஆம் ஆண்டு ஐந்து பெண்களால் தொடங்கப்பட்ட ஒரு பள்ளி தான் வெஸ்ட் விண்ட். தங்களுடைய குழந்தைகளுக்கு பிரத்தியேக கவனம் செலுத்தி ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருமதி. ரெனால்ட்ஸ் உள்ளிட்ட ஐந்து பெண்கள் இணைந்து தான் இந்த வெஸ்ட் விண்ட் பள்ளியை தொடங்கினார்கள்.
இவர்களில் ரெனால்ட்ஸ் அமெரிக்கா தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர்கள் தங்களுடைய ஐந்து பிள்ளைகளையும் இரண்டரை வயதிலேயே இந்த புதிய பள்ளியை தொடங்கி அதில் சேர்த்து கல்வி பயில வைத்தனர். இந்த பள்ளியில் பலரும் தன்னுடைய பிள்ளைகளை சேர்த்து முன் வந்தனர். பலரும் இந்த பள்ளி செயல்படுவதற்காக நன்கொடைகளையும் வழங்க தொடங்கினர்.
தரமான கல்வி வழங்கக்கூடிய ஒரு பள்ளி நிர்வாகமாக இது மும்பையில் புகழ்பெற்றிருக்கிறது. 1947 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக வளர்ந்து வந்த இந்த பள்ளி குழந்தைகளுக்கு கல்வி மட்டும் இல்லாமல் அவர்களின் குண நலன்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
ஆண்டுதோறும் ஒரு கண்காட்சியையும் இந்த நிகழ்ச்சி நடத்துகிறது. இதில் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அவர்கள் கைப்பட உருவாக்கிய கைவினைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள் . இதன் மூலம் திரட்டப்படும் பணமானது ஏழை குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பள்ளியில் தான் அம்பானியின் பேரன் மற்றும் பேத்தி ஆகியோர் கல்வி பயில இருக்கின்றனர் .
இந்த பள்ளியில் அட்மிஷன் கட்டணமாக 12 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய், பதிவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இது தவிர மாதம் கல்வி கட்டணமாக 3500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இது தவிர பல்வேறு கூறுகள் கட்டணங்களும் விதிக்கப்படுமா,. இந்த பள்ளியில் ஒவ்வொரு மாணவர்களும் தலா 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாய் வரை ஆண்டுதோறும் செலுத்த வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications