இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் தலைவராக இருப்பது மட்டும் அல்லாமல் சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக குழுவில் இணைந்தார்.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டில் சுமார் 45 சதவீதம் மதிப்பீடு இவர் தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை சார்ந்து உள்ளது. முகேஷ் அம்பானி கடந்த சில வருடங்களாக எவ்விதமான சம்பளமும் பெறாமல் இருக்கும் வேளையில் ஈஷா அம்பானியின் சம்பளம் என்னவாக இருக்கும்..?

ஈஷா அம்பானியின் மாதாந்திர சம்பளம் 35 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதில் அவருக்கு கிடைக்கும் ஈவுத்தொகை லாபம், போனஸ் ஆகியவை சேர்க்கப்படவில்லை. பொதுவாக உயர்மட்ட அதிகாரிகளுக்கு பர்பாமென்ஸ் போனஸ் தான் பெரும் தொகையாக இருக்கும்.
இந்த நிலையில் பர்பாமென்ஸ் போனஸ் இல்லாமல் 31 வயதான ஈஷா அம்பானி மாதம் 35 லட்சம் சம்பளம் வாங்குவதன் மூலம் அவர் தோராயமாக 4.2 கோடி ரூபாய் அளவில் வருடாந்திர சம்பளம் பெறுகிறார். ஆனால் ஈஷா அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் அதாவது 829.5 கோடி ரூபாயாக உள்ளது.
ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8.361 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தில் கேகேஆர் 2,069.5 கோடி ரூபாய் முதலீடு செய்து 0.25% ஈக்விட்டி பங்குகளை பெற்றது மூலம் இதன் ஈஷா அம்பானி, முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் 8.28 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 8.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் பங்கு மதிப்பின் அடிப்படையில் நாட்டின் டாப் 4 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் இந்தியாவில் சுமார் 18,500 இடங்கள் ரீடைல் கடைகளையும், டிஜிட்டல் வர்த்தக தளங்களுடன் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை இயக்கி வருகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் நான்கு முக்கிய நுகர்வோர் பிரிவுகளை கொண்டு இயங்கி வருகிறது மளிகை பொருட்கள், கனஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் மற்றும் மருந்துகள். ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளராக இப்பதோடு 26.7 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.
ரிலையன்ஸ் ரீடைல் கீழ் AJIO, Tira, Dunzo, Netmeds, Reliance Digital மற்றும் Reliance Trends ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications