இஷா அம்பானி அமெரிக்க வீட்டை வாங்கிய ஹாலிவுட் பிரபலம்.. விலை என்ன தெரியுமா..?

பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸும் நடிகர் பென் அப்லெக்கும் அடிக்கடி ஏதாவது விஷயத்துக்காக தலைப்புச் செய்திகளில் அடிபடுவர். மீண்டும் இருவரும் மீடியாவின் பார்வையில் விழுந்துள்ளனர்.

இந்த முறை அவர்கள் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கியதற்காக பேசப்படுகின்றனர். இதில் என்ன பெரிய விஷயம் இருக்குன்னு நீங்க கேட்கலாம்.. இருக்கே..!

இஷா அம்பானி அமெரிக்க வீட்டை வாங்கிய  ஹாலிவுட் பிரபலம்.. விலை என்ன தெரியுமா..?

இந்த பங்களா முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்குச் சொந்தமானதாகும். இஷா அம்பானியும் அவரது கணவர் ஆனந்த் பிரமாலும் இங்கு வசித்தனர். ஹாலிவுட்டில் வீடுவாங்க நினைத்தபோது இந்த ஆடம்பரமான பங்களா ஜெனிபர் லோபஸ், பென் அப்லேக்கின் கண்களில் பட்டது இந்த வீடு.

இஷாவின் பங்களா: ஹாலிவுட்-ன் பிரபலமான பெவர்லிஹில்ஸ் பகுதியில் 38,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பங்களாவில் 12 பெட்ரூம்கள், 24 பாத்ரூம்கள், இண்டோர் பிக்கிள்பால் கோர்ட், ஜிம், சலூன், ஸ்பா, 155 அடி நீள ஸ்விம்மிங் பூல், அவுட்டோர் கிச்சன் என சொல்லத்தக்க பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இஷா கர்ப்பமாக இருந்தபோது இங்குதான் வசித்து வந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

லோபஸ்-அப்லெக்கின் மல்டி மில்லியன் பர்சேஸ்: இஷாவின் பங்களாவை சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புக்கு ஜெனிபர் லோபஸும் பென் அப்லெக்கும் விலைக்கு வாங்கியுள்ளனர். அமெரிக்க மதிப்பில் 61 மில்லியன்களாகும்.

முன்னதாக பென் அப்லெக் தனது பசிபிக் பாலிசாடெஸ் வீட்டை 28.5 மில்லியன் டாலருக்கு விற்றார். ஜெனிபர் லோபஸ் பெல்-ஏர் சொத்தை 34 மில்லியன் டாலருக்கு விற்றார். இதைத் தொடர்ந்து இந்த நட்சத்திர ஜோடி இந்த சொகுசு பங்களாவை வாங்கியுள்ளது.

அம்பானி தொடர்பு: இஷாவின் இந்த பங்களா அவருக்கு மிகவும் நெருக்கமானதாகும். அவர் கர்ப்பமாக இருந்தபோது பெரும்பகுதியை இங்கு செலவிட்டார். 2022இல் கிருஷ்ணா, ஆதித்யா ஆகிய இரட்டைக் குழந்தைகளை இஷா பெற்றெடுத்தார்.

இந்த பங்களாவில் இஷாவின் தோழியும் நடிகையுமான பிரியங்கா சோப்ராவின் படம் முன்னோட்டமாகத் திரையிடப்பட்டது. ஜனவரியில் பான் நளினின் குஜராத்தி படமான செல்லோ ஷோ ஆஸ்கருக்குச் செல்லுமுன்பாக இங்கு திரையிடப்பட்டது.

லோபஸ், அப்லெக் காதல் பயணம்: ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அப்லெக்கின் காதல் பயணம் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது.
2000இன் தொடக்கத்தில் ரொமான்ஸில் திளைத்த இந்த ஜோடி திடீரென பிரிந்தது. கோவிட் காலத்துக்குப் பின்னர் இருவருக்கும் இடையே மீண்டும் ஃபயர் பற்றிக் கொண்டது.

இருபதாண்டுகளாக நீடித்த நேசம் 2022இல் திருமணத்தில் முடிந்தது. முன்னாள் கணவருக்குப் பிறந்த இரட்டையர்களான மார்க் ஆண்டனி, எம்மி மற்றும் பென் அப்லெக்கின் மூன்று குழந்தைகள் என ஒட்டு மொத்தக் குடும்பமும் இப்போது சுபமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+