இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல துறையில் புதியதாக வர்த்தகம் செய்ய இறங்கி வரும் இதேவேளையில், தான் ஏற்கனவே இருக்கும் வர்த்தக துறையில் அனைத்து பிரிவுகளிலும் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை முக்கிய இலக்காக கொண்டு உள்ளது.
இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் ஏற்கனவே கொடிகட்டி பறக்கும் ரீடைல் வர்த்தக சந்தையில் ஆன்லைன் பேஷன் ரீடைல் தளமான AJIO அடுத்தக்கட்ட விரிவாக்கத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ஒரே மகளான ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு மிகப்பெரிய வர்த்தகத்தை பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்கள் பிரிவில் வைத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் டிரென்ஸ் தாண்டி நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கவர வேண்டும் என்ற ஒரே இலக்குடன் பல பிராண்ட் பெயரில் பல கடைகளை திறந்துள்ளது.
இதன் நீட்சியாக மீஷோ நிறுவனத்தை போலவே ஒரு ரீசெல்லர் நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் முக்கிய வர்த்தக தளமாக விளங்கும் AJIO மலிவு விலை பேஷன் பொருட்களை ஜீரோ கமிஷன் மாடல் உடன் வர்த்தக மாடல் உடன் புதிய மார்கெட்பிளேஸ் அதாவது ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்குவது குறித்து இறுதிக்கட்ட பேச்சவார்த்தையை துவங்கியுள்ளது.
AJIO - மீஷோ
ரீலையன்ஸ் AJIO இதுநாள் வரையில் பிளிப்கார்ட்-ன் மைந்திரா, அமேசான் பேஷன்ஸ், டாடா கிளிக் ஆகிய நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வந்த நிலையில், தற்போது சாப்ட்பேங்க் முதலீட்டில் ரீசெல்லர் பிரிவில் யாரும் அசைக்க முடியாத ஆதிக்கத்துடன் இயங்கி வரும் மீஷோ நிறுவனத்துடன் நேருக்கு நேர் மோத உள்ளது.
AJIO Street வர்த்தகம்
ஈஷா அம்பானி தலைமையிலான நிர்வாகம் இப்புதிய தளத்திற்கு AJIO Street என்ற பெயருடன் வருவது மட்டும் அல்லாமல் விற்பனையாளர்களுக்கு 15 நாளில் பேமெண்ட் என்ற மிகப்பெரிய சலுகை உடன் புதிய விற்பனையாளர்களை ஈர்க்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்கள்
ரீசெல்லர் தளங்களில் பொதுவாகவே அதிகளவில் விற்பனை செய்யும் பொருட்கள் என்றால் அது பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்கள் தான், இந்த நிலையில் இவ்விரண்டிலும் வலிமையாக இருக்கும் AJIO ரீசெல்லர் துறைக்குள் இறங்குவது மூலம் இந்தியாவின் சிறு, குறு கிராமங்கள் வரையில் வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் கொண்டு சேர்க்க முடியும்.
ஜீரோ கமிஷன் முறை
இதில் முக்கியமாக ஜீரோ கமிஷன் முறை என்பதால் விற்பனையாளர்கள் தங்களது பொருட்களை, தயாரிப்புகளை விற்பனை செய்ய இத்தளத்திற்கு எவ்விதமான கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை என்பது தான். இதேவேளையில் ரிலையன்ஸ், விற்பனையாளர்கள் செய்யும் விளம்பரம் மற்றும் இதர சேவைகள் மூலம் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும்.
இலவசங்கள்
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் இலவசங்கள் குறித்து கேட்கவே தேவையில்லை. இதேபோல் இந்த புதிய AJIO Street என்னும் ரீசெல்லர் தளத்தின் மூலம் சிறு குரு கிராமம், டவுன் பகுதி மக்களை டார்கெட் செய்யும் காரணத்தால் 5 ரூபாயில் துவங்கி 1000 ரூபாய் வரையிலான பொருட்களை மட்டுமே விற்பனை செய்யப்படும், இதன் மூலம் இத்தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் சராசரி விலை 300-350 ரூபாய் வரையில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications