ராஜஸ்தான்: முகேஷ் அம்பானியின் மகளும் பிராமல் குழுமத்தின் மருமகளுமான ஈஷா அம்பானிக்கு சொந்தமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய நூற்றாண்டு பழமையான மாளிகை இருக்கிறது.
முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், இவரது ஒரே மகள் ஈஷா அம்பானி. இவருக்கும் புகழ்பெற்ற பிராமல் குடும்பத்தின் தலைவர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்தியாவின் சக்தி வாய்ந்த இரண்டு தொழில் குடும்பங்கள் இதன் மூலம் இணைந்தன.

அஜய் பிராமலை பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலத்தின் பாகர் பகுதிதான் அவர்களது பூர்வீகம். எனவே இங்கே 100 ஆண்டு பழமையான ஒரு மாளிகை இருக்கிறது. இந்த மாளிகை தற்போது ஈஷா அம்பானிக்கு உரியதாக மாறி இருக்கிறது.
பாகர் என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கே பெரிய குடும்பத்தினர் என்றால் அது பிராமல் குடும்பத்தினர் தான். தற்போது இவர்கள் மும்பையில் வசித்து வந்தாலும், தங்களுடைய பாரம்பரிய குடியிருப்பை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். தங்கள் கிராமத்தில் இருக்கும் நிலப்பகுதிகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டமைப்பதற்காக வழங்கியுள்ளனர். பாகர் கிராமத்தை முன்னேற்ற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
அம்பானி மற்றும் பிராமல் குழுமத்தினர் இடையிலான நட்பு 40 ஆண்டு கால வரலாறை கொண்டது. அது ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் இடையிலான திருமணத்தின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது. தற்போது பிராமல் குழுமத்தின் மதிப்பு 67 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். ஆனந்த் பிராமலின் தாத்தாவான சேத் பிராமல் தான் பிராமல் குழுமத்தை நிறுவியவர். 1920 ஆம் ஆண்டு வெறும் 50 ரூபாயுடன் பாகரியிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குடும்பத்தை நிறுவினார்.
பாகர் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ளது பிராமல் ஹவேலி என்ற மிகப்பெரிய மாளிகை . பிராமல் குடும்பத்தின் பாரம்பரிய குடியிருப்பு இது. 1928 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை பிராமல் குடும்பத்தின் செல்வ வளம் மற்றும் அவர்களது கலை நயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
மிகப்பெரிய அளவில் தோட்டம் மற்றும் பாரம்பரிய மற்றும் நவீன கட்டடக் கலைகள் இணைந்த ஒரு கட்டமைப்பு தான் இவர்களது வீடு.
இந்த வீட்டின் நுழைவாயில் அப்போதைய ஜெய்ப்பூர் மகாராஜா தன்னுடைய யானையுடன் மாளிகைக்குள் வரவேண்டும் என்பதற்காக பெரிய அளவில் கட்டப்பட்டது. பாகர் கிராம மக்கள் பிராமல் குடும்பத்தினர் மீது பாசமும் மரியாதையும் வைத்திருக்கின்றனர். இதனால் ஈஷா அம்பானியை தங்கள் கிராமத்தின் மருமகள் என கூறி கொண்டாடுகின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications