அதானி ஒருபக்கம் வெளிநாட்டில் முதலீடு செய்து வரும் வேளையில், மறுபுறம் அம்பானி வெளிநாட்டு பிராண்டுகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளார். அதிலும் முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் துறை வர்த்தகத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் வேளையில் சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரையில் தனது வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உலகின் முன்னணி உள்ளாடை தயாரிப்பாளர்களில் ஒன்றான இஸ்ரேல் நாட்டின் டெல்டா கலில் (Delta Galil) நிறுவனத்துடன் ரிலையன்ஸ் 50:50 என்ற பங்கு இருப்பில் புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி, உலகளாவிய உள்ளாடை பிராண்ட்களின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பதோடு, இந்தியாவில் lingerie மற்றும் பிற உள்ளாடை பொருட்களை வடிவமைத்துத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே கிளோவியா, ஜிவாமே மற்றும் அமண்டே ஆகிய உள்ளாடை பிராண்ட்களை கையகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது Delta Galil உடன் இணைந்து உலகளவில் பிரபலமாக இருக்கும் பிற பிராண்டுகளை விற்பனை செய்யப்போகிறது.
இதன் மூலம் இந்தியாவில் ஜாக்கி மற்றும் ஸ்பீடோ போன்ற பிராண்ட்களுடன் இந்தியாவில் உள்ளாடை விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பேஜ் இண்டஸ்ட்ரீஸுக்கு நேரடியான போட்டியை உருவாக்கும். இன்றைய வர்த்தகத்தில் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.64 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்திய உள்ளாடை சந்தையில் பெண்களின் உள்ளாடை மற்றும் ஓய்வு நேரத்தில் அணியும் ஆடைகளின் மொத்த சந்தை பங்கீடு 60% சதவீதமாக உள்ளது. ஆண்கள் உள்ளாடை வெறும் 30% பங்கீட்டையும், குழந்தைகள் அணியும் உள்ளாடை 10 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளதை கவனிக்க வேண்டும்.
டெல்டா கலில் நிறுவனம் கால்வின் கிளைன், டாமி ஹில்ஃபிகர், மற்றும் கொலம்பியா உள்ளிட்ட சில முக்கிய பிராண்ட்களின் மொத்த உரிமதாரராக உள்ளது. மேலும் சமீபத்தில் அடிடாஸ் மற்றும் போலோ ரால்ஃப் லாரன் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணியை உருவாக்கியது.
1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டெல்டா கலில், தனது உலகளாவிய வர்த்தகத்திற்காக மூன்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை கொண்டு செயல்படும் மாபெரும் நிறுவனமாகும். இஸ்ரேலில் fabric innovation-க்கான ஒரு R&D சென்டரும், ஒரிகானில் பர்பாமென்ஸ் சாக்ஸ்-க்கும் மற்றும் சீனாவில் பிராக்களுக்கு தலா ஒரு R&D சென்டரை வைத்து இயக்குகிறது.
டெல்டா கலில் நிறுவனத்திடம் 7 பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகள், 12 நிலுவையில் உள்ள காப்புரிமைகள் மற்றும் 8 செயல்பாட்டில் உள்ள தொழில்நுட்ப டிரேட்மார்க் என அறிவுசார் சொத்துக்கள் அடங்கியே போர்ட்ஃபோலியோவையும் வைத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல்-க்கு ஈஷா அம்பானி பொறுப்பேற்ற பின்பு கிளோவியா, ஜிவாமே மற்றும் அமண்டே ஆகிய உள்ளாடை விற்பனையாளர்கள் மற்றும் பிராண்ட்களை கையகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் உள்ளாடை பிரிவில் மட்டுமே சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்தன.
கூடுதலாக, இது ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் மூலம் தனது பிற தனியார் பிராண்டை விற்பனை செய்கிறது, இதற்காக மார்க்ஸ் & ஸ்பென்சர் மற்றும் Hunkemoller International. ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த வரிசையில் தற்போது இஸ்ரேல் நாட்டின் டெல்டா கலில் உடனான கூட்டணி மூலம் பல முன்னணி வெளிநாட்டு பிராண்ட் உள்ளாடைகளை நாடு முழுவதும் விற்கப்போகிறது.
Wazir Advisors நிறுவனத்தின் சந்தை கணிப்புகளின் படி, இந்தியாவில் உள்ளாடை பிரிவு கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது, 2023 ஆம் ஆண்டில் சந்தை அளவு ₹61,091 கோடிக்கு அதிகரித்தது. இந்த பிரிவு 2025 ஆம் ஆண்டில் ₹75,466 கோடிக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications