நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். ஆடம்பரமான லைப்ஸ்டைல்-க்கு பெயர்போன அம்பானி குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஸ்டைலிஸ்ட் , மேக்கப் ஆர்டிஸ்ட் என ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியாக இத்துறையில் பிரபலமானவர்களை நியமித்துள்ளனர்.
அப்படி ஈஷா அம்பானியின் ஸ்டைலிஸ்ட் பெயர் பிரியங்கா கபாடியா. இவர் பிரபல ஸ்டைலிஸ்ட் மற்றும் பேஷன் டைரக்டராகவும் உள்ளார். இந்தாண்டு ஈஷா அம்பானி பிளான் செய்து மிகப் பிரமாண்டமான அளவில் நடத்திய MET Gala நிகழ்ச்சி மூலம் ஏராளமான பிரபலங்களை தனது வாடிக்கையாளர்களாக ஈர்த்தார் பிரியங்கா கபாடியா.

பாலிவுட் நடிகைகளான ஜான்வி கபூர், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோன், ராதிகா மெர்ச்சன்ட் உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மும்பையில் பிறந்து வளர்ந்த பிரியங்கா கபாடியா பள்ளிப்படிப்பை மும்பையிலேயே முடித்து ஸ்டைலிஸ்டாக மாறி காண்டிநாஸ்ட்டில் (CondeNast) 12 வருடங்களுக்கும் மேலாக வேலை பார்த்தார்.
பல வருட அனுபவத்திற்கு பின்னர் அவர் வோக் இந்தியாவில் அசோசியேட் பேஷன் எடிட்டராக வேலைக்குச் சேர்ந்தார். வோக் இந்தியாவில் சில காலம் வேலை பார்த்த பின் இப்போது கிரியேட்டிவ் டைரக்டராகவும் ஸ்டைலிஸ்ட்டாகவும் பிரியங்கா உள்ளார்.
பல பிரபலங்களுக்காக வேலை பார்த்துள்ளார் பிரியங்கா கபாடியா, சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டீவ் ஆக இருக்கும் இவர் பிரபலங்கள் உடனான போட்டோக்களை அள்ளி தெறிக்க விடுகிறார். அவருக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் பாலோவர்கள் உள்ளனர்.
பிரியங்கா பார்க்கும் ஒவ்வொரு ஸ்டைலிஸ்ட் பணிகளுக்கும் சுமார் 1 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார். இதோடு இவருடைய டீம்-க்கு தனி சம்பளத்தை வசூலித்து வரும் காஸ்ட்லியான stylist ஆக விளங்குகிறார்.
இதன் மூலம் ஏராளமான இளம் வயதினர் பேஷன் துறையில் சேருவதற்கான முன்னோடியாக பிரியங்கா விளங்குகிறார். பிரியங்கா பிரபல போட்டோகிராபர் ஹாசிம் பதானியை திருமணம் செய்துக்கொண்டு உள்ளார்.
சமீபத்தில், அவர் தனது முதல் திரைப்படத்துக்கான விளம்பரத்தை வெளியிட்டார். வோக் அட்டைப்படத்துக்காக ஜான்வி கபூரை மிகச் சிறப்பாக ஸ்டைல் செய்திருந்தார். பிரியங்கா கபாடியா திறமையான எழுத்தாளர்/நடிகை ட்விங்கிள் கண்ணா மற்றும் நேஹா துபியா ஆகியோருக்கு தனிப்பட்ட ஒப்பனையாளராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கிய அரட்டை நிகழ்ச்சியில் அவரது தேர்வுகளுக்காக பாராட்டப்பட்டார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பவர் லுக் வழங்குவதைத் தவிர, பிரியங்கா ஒரு உடற்பயிற்சி ஆர்வலராகவும் இருக்கிறார். இதனால் அவர் ஒரு பிராண்டிங் கன்சல்டண்டாகவும் இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை பதிவிடுகிறார். அவரது ரசிகர்களுக்காக தனது லேட்டஸ்ட் பேஷன் கிரியேட்டிவிட்டி பற்றி இன்ஸ்டாகிராமில் உடனுக்குடன் பதிவிடுகிறார். அவரது ரசிகர்கள் இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.


Click it and Unblock the Notifications