மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக இருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் மீதும், கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவது மட்டும் அல்லாமல் வர்த்தகம், முதலீடு என அனைத்தும் பாதித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் திங்கட்கிழமை லெபனான் நாட்டின் மீது செய்த தாக்குதலில் சுமார் 490-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் லெபனான் நாட்டின் பெரும் பகுதி ரத்தக்களறியாக காட்சி அளிப்பது மட்டும் அல்லாமல் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும், குடும்பத்தையும், சொந்தங்களையும் இழந்து தவிக்கின்றனர்.

2006ல் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போருக்குப் பின்னர், நேற்றைய தாக்குதல் தான மிகக் கொடூரமான தாக்குதலாகும். லெபனானில் இறந்த 490 பேரில் 90-க்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் மூலம் எந்த வகையில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதை இப்போது பார்ப்போம்.
சமூக-பொருளாதார தாக்கம்: இஸ்ரேல்-காசா போர், ஈரான் போன்ற அண்டை நாடுகள் மற்றும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்டோரின் ஈடுபாட்டுக் காரணமாகப் பெரிய அளவில் வெடிக்கும் என்ற அச்சம் பல வாரங்களாக இருந்து வரும் வேளையில், இஸ்ரேல் ராணுவத்தின் இப்புதிய தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.
இது இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரண்டு நாட்டின் பொருளாதார பாதிப்புகளையும் பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே ஈரான் நாடு மேற்கத்திய நாடுகளின் தடைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இஸ்ரேல் உடனான போர் அந்நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போடும் என்று சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே பல ஆண்டுகளாக அரசியல் நிலையற்ற தன்மையால் திணறும் லெபனான் பொருளாதாரம், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக மிக மோசமான தாக்கத்தை எதிர்கொள்ளும். தென்னை மரங்கள் வீழ்ந்தால், பூமியே ஆடும் என்று சொல்வார்கள். அதேபோல, இஸ்ரேல்-காசா போர் விரிவடையும் பட்சத்தில், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் பரந்த பொருளாதாரங்களும் பாதிக்கப்படும்.
காசா போரின் காரணமாக ஏற்கனவே குறைந்து வரும் இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி, 2024 இல் வெறும் 1.5% ஆகவும், 2025 இல் 4.2% ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போர் அச்சம் இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இஸ்ரேல் பொருளாதாரம் கூடுதலாகப் பாதிக்கப்படலாம்.
இந்த போர் காரணமாக விவசாய பொருட்கள் முதல் கச்சா எண்ணெய், தொழில்நுட்பம் என பல பொருட்களும், சேவைகளும் சர்வதேச சந்தையில் பாதிக்கப்படும். மேலும் முதலீட்டாளர்கள் மற்ற சந்தையை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர், குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்த பின்பு, லெபனான் தாக்குதலுக்குப் பின்பு அதிகப்படியான முதலீடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறியுள்ளது.
குறிப்பாக இந்தியாவுக்கு ஈரான் நாட்டில் இருந்து வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கும், இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு உள்ள போர் பதற்றம் சர்வதேச எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications