மேற்கத்திய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ஈரான் நேரடியாகவும், இதுவரை நடக்காத வகையிலும், இஸ்ரேலில் அரசு இலக்குகளை வரும் சனிக்கிழமை தாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பெரும் பிராந்திய போர் பதற்றத்தைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேல் நாட்டின் ராணுவ தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று ஈரான் குடியரசு குற்றம் சாட்டுகிறது.
ஈரானின் உச்சத் தலைவர் Ayatollah Ali Khamenei இஸ்ரேல் தனது தாக்குதலுக்கு "தண்டிக்கப்படும்" என்று பலமுறை கூறியுள்ளார். இருப்பினும், இந்த எதிர் நடவடிக்கை எந்த வடிவத்தை எடுக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ஈரான் அடுத்த 48 மணிநேரங்களில் ட்ரோன்கள் மற்றும் துல்லியமாக இலக்கை தாக்க கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வந்திருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது. மேலும், இஸ்ரேல் ஈரான் மற்றும் பாலஸ்தீன அரசு மத்தியில் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கும், தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை.
இதன் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் 1.8% அதிகரித்துப் பேரலுக்கு 91 டாலருக்கும் மேல் உயர்ந்தது. இதுவரை இந்த ஆண்டில் மட்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு 18% ஆகும்.
தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.71 சதவீத உயர்வுடன் 90.45 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் 0.64 சதவீத உயர்வுடன் உள்ளது. OPEC நாடுகளின் எண்ணெய் விலையும் 90.62 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த தாக்குதல் நடந்தால், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது மொத்த மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கச்சா எண்ணெய் சப்ளை பெரிய அளவில் பாதிக்கப்படுவதோடு பணவீக்கம் தாறுமாறாக அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications