இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் இஸ்ரேல் பதிலடி ஆகியவை மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் திட்டமிடப்பட்ட சில முக்கிய முயற்சிகள் அனைத்தும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மத்தியில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வரும் வேளையில், கடந்த சில வருடங்களாக மிகவும் தீவிரமாக வெடிக்க துவங்கியுள்ளது.
தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் ஹமாஸ் அமைப்பின் 5000 ஏவுகனை தாக்குதல் மூலம் துவங்கியது. ஹமாஸ் அமைப்பின் இந்தத் திடீர் தாக்குதல் 2021 இல் இஸ்ரேலும் ஹமாஸ்-ம் 10 நாள் போருக்குப் பிறகு நடந்த மிக மோசமான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இயல்பாக்குவதற்கு அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதேபோல் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் வழியாகச் பொருளாதார வழித்தடத்தை அமைக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் மூலம் இவ்விரு திட்டத்திலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் போரை அறிவித்தது முதல் காசா பகுதி மீது குண்டுவீசி வருகிறது. மேலும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து காசா பகுதிகளுக்குள் டேங்கர், அதிநவீன ஆயுதங்கள் உடன் ராணுவ வீரர்கள் முன்னேறி வருகிறார்கள். ஹமாஸ் போராளிக்கள் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் நடந்திய மிக மோசமான தாக்குதலாக இது உள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் உலகமே வியக்கும் வண்ணம் நடந்த ஜி20 கூட்டத்தில் தான் India-Middle East-Europe Economic Corridor (IMEC) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் இரு பிரிவுகளை அடங்கியது, கிழக்கு காரிடார் பொருளாதார வழித்தடத்தில் இந்தியா மற்றும் அரேபிய வளைகுடா பகுதியை இணைக்கிற்து. வடக்கு காரிடார் பொருளாதார வழித்தடத்தில் அரேபிய வளைகுடா பகுதியில் இருந்து ஐரோப்பாவை இணைக்கிறது.
இந்த 2 கட்ட பொருளாதார வழித்தடத்தில் பல நாடுகளின் எல்லை தாண்டும் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து வழி தடத்தை கொண்டது. IMEC வழித்தடத்தில் இந்தியாவில் துவங்கி ஐக்கிய அரபு அமிரீகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பா துறைமுகத்தில் முடிகிறது.
அமெரிக்கா IMEC வழித்தடத்தை செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்க முக்கிய காரணம் சீனாவின் Belt and Road Initiative (BRI) திட்டத்திற்கு இத்திடம் இருக்க வேண்டும் என்பது தான். இதன் மூலம் சர்வதேச சப்ளை செயினில் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளும், அதற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
இந்த மாபெரும் திட்டத்தில் தற்போது இஸ்ரேல் போரில் மூழ்கியிருக்கும் காரணத்தால் இத்திட்டம் தோல்வியில் முடியலாம் என கூறப்படுகிறது.
தற்போது இஸ்ரேல் அரசு காசா ஸ்ட்ரிப் பகுதிக்கு மின்சாரத்தை மொத்தமாக துண்டித்துள்ளது. இதேவேளையில் ஹமாஸ் அமைப்பு தற்போது சவுதி அரேபியா, ஈரான், கத்தார் ஆகியவை ஆதரவாக குரல் கொடுத்தது.
மேலும் இந்த போர் மூலம் IMEC வழித்தடம் பாதிக்கப்பட்டது மூலம் யார் பலன் அடைவார்கள் என்றால் சீனா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை தான் என S.L. Kanthan என்பவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications