மாலத்தீவை விட்டுத்தள்ளுங்க.. இந்தியாவுக்கு வாங்க.. இஸ்ரேல் தூதரகத்தின் டக்கரான பதிவு..!

இந்தியா - மாலத்தீவு மத்தியிலான பிரச்சனை பெரும் விவாதமாக மாறிய நிலையில், மாலத்தீவு இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக எடுத்த முடிவு இந்தியா இஸ்ரேல் நாட்டினருக்கு இந்தியா விருப்பமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

இஸ்ரேலில் தூதரகம் திங்கட்கிழமை தன் நாட்டு மக்களை இந்தியாவைச் சுற்றுலாத் தலமாகக் கருதுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேல் தூதரகத்தின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் மாலத்தீவு அரசு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் வருகையைத் தடை செய்வதாக அறிவித்தது தான்.

மாலத்தீவை விட்டுத்தள்ளுங்க.. இந்தியாவுக்கு வாங்க.. இஸ்ரேல் தூதரகத்தின் டக்கரான பதிவு..!

மாலத்தீவு அரசு இஸ்ரேல் நாட்டினரை அந்நாட்டிற்குள் வருவதைத் தடை செய்யும் அறிவிப்பு வெளியான ஒரே நாளில் இந்தியாவின் இஸ்ரேலிய தூதரகம் திங்கட்கிழமை தன் நாட்டு மக்களை இந்தியாவைச் சுற்றுலாத் தலமாகக் கருதுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மாலத்தீவு அரசின் இந்த தடைக்கு முக்கிய காரணம், கடந்த எட்டு மாதங்களாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் கசா பகுதியில் பாலஸ்தீன மக்களைக் குறிவைத்து நடத்தும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த தடை உத்தரவை வெளியிட்டு உள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முயிஸ்ஸு இந்த முடிவு, இஸ்ரேல்-மாலத்தீவு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. "இந்தியா வெளியே" பிரச்சாரத்தின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த முகமது முயிஸ்ஸு, சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டதோடு, இந்தியப் படைகளை மாலத்தீவிலிருந்து திரும்பப் பெறவும் செய்தார்.

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் சமூக ஊடக பதிவில் "மாலத்தீவு இனி இஸ்ரேலியர்களை வரவேற்காததால், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இதயப்பூர்வமான விருந்தோம்பலுடன் வரவேற்கப்படும் அழகிய இந்தியக் கடற்கரைகள் இங்கே உள்ளன" என்று தெரிவித்துள்ளது. மாலத்தீவுக்கு மாற்றுச் சுற்றுலாத் தலங்களாக அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லக்ஷத்தீவுகள், கேரளா, கோவா ஆகிய கடற்கரைகளை இந்த பதிவில் பரிந்துரைத்துள்ளது.

இஸ்ரேலிய தூதரகத்தின் இந்த முயற்சி, இந்தியா-மாலத்தீவு உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்ட சூழலில் வந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்குக் கவரும் தூதரகத்தின் இந்த முயற்சி, இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதாக உள்ளது. எதிர்காலத்தில் இந்தியா-இஸ்ரேல் மற்றும் இந்தியா-மாலத்தீவு உறவுகள் எவ்வாறு வடிவம் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+