கோவிட், ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவது, இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியில் துவங்கியுள்ள ராணுவ தாக்குதல்கள் தான். இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியில் வெடித்த இந்த மோசமான தாக்குதல்கள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வரும் காரணத்தால் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை குறித்து சந்தை வல்லுனர்கள் கூறுகையில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தால் இஸ்ரேலில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் தனது வர்த்தகத்தை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இஸ்ரேல் நாட்டில் தற்போது இயங்கி வரும் டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வர்த்தகத்தை இந்தியாவுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ மாற்ற உள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் இன்டெல், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற சுமார் 500க்கும் அதிகமான MNC நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் R&D சென்டர்களை வைத்துள்ளது. இஸ்ரேலில் இருக்கும் இந்த 500 வெளிநாட்டு நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். அமெரிக்க சிலிக்கான் வேலி-க்கு அடுத்தாக அதிக மதிப்புடைய டெக் சந்தையாக இஸ்ரேல் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டில் ஸ்டார்ட்அப் காலச்சாரம் அமெரிக்காவில் உருவான இதே காலக்கட்டத்தில் உருவான காரணத்தால் பல தொழில்நுட்பத்தில் வியக்க வைக்கும் சேவைகள் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை சுதாரித்துக்கொண்ட அமெரிக்க டெக் சாம்ராஜ்ஜியங்கல் இஸ்ரேல் நிறுவனங்களை கைப்பற்றி அலுவலகத்தையும், வர்த்தகத்தையும் அந்நாட்டில் துவங்கியது.
இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை காரணமாக தற்போது இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதே டைம் சோனில் இருக்கும் நாடுகளுக்கு வர்த்தகத்தை மாற்றியும், ஊழியர்களுக்கு பிஸ்னஸ் கன்டினியூட்டி பிளான் கொண்டு வரவும் தேவை உருவாகியுள்ளது.
இதேவேளையில் இந்தியா உட்பட பல நாடுகள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டைவர்களை திரும்ப அழைக்க முடிவு செய்து மீட்டு பணிகளை துவங்கியுள்ளனர். இதனால் இஸ்ரேல் அலுவலகம், வர்த்தகத்தை சார்ந்து இருக்கும் வெளிநாட்டு வர்த்தகங்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் வர்த்தக பாதிப்புகளை எதிர்கொள்ளும் என ஐடி ஆராய்ச்சி அமைப்பான எவரெஸ்ட் குரூப் தலைவர் Peter Bendor-Samuel தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் தற்போது பாதுகாப்பு, R&D, cybersecurity, ஆட்டோமோட்டிவ் இன்னோவேஷன் துறையில் அசத்தி வரும் நாடாக உள்ளது.


Click it and Unblock the Notifications