இஸ்ரேல் மீது ஈரான் திங்கட்கிழமை திடீரென ஏவிய 200 ஏவுகணைகள் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படுத்தவில்லை என்றாலும், இஸ்ரேல் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் இஸ்ரேல் நாட்டின் ஐயன் டோம் இந்த தாக்குதல் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியதும், இஸ்ரேல் உளவு படை மொசாட் முன்கூட்டியே தகவல் பெற முடியலாம் போனது எனப் பல தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க தயாராகி வரும் இஸ்ரேல்-க்கு அமெரிக்க அரசு தரப்பில் முக்கியமான அறிவுரை வந்துள்ளது. அமெரிக்கா பொதுத் தேர்தலை எதிர்கொண்டு வரும் வேளையில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்ற யூகம் இருக்கும் போது ஜோ பைடன் அரசு ஈரான் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் நடத்தும் என அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் தாக்குதலை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்ததுள்ளது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலின் பதில் தாக்குதலில் அமெரிக்கா இணைந்து செயல்படும் என உறுதியளித்தார். இந்த நிலையில் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறுகையில், "இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு" என்றும், இதற்கு அமெரிக்கா தேவையான ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின், இஸ்ரேல் பாதுகாப்பு செயலாளருடன் செவ்வாய்க்கிழமை இரவு தொடர்பு கொண்டு, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் தொடர்பாகப் பேசினார்.
ஈரான் இந்த தாக்குதலை இஸ்ரேல் சமீபத்தில் காசாவில் பாலஸ்தீனியர்களைக் கொன்றது மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் இஸ்மாயில் ஹனியா, ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்டோரை கொன்றதற்கு பதிலடியாக நடத்தியது.

"ஈரானின் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது, இந்த தாக்குதலுக்கான கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம், அதை உறுதி செய்ய இஸ்ரேலுடன் நாங்கள் பணியாற்றுவோம்" என்று சுல்லிவன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏற்கனவே இஸ்ரேல் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் பெரிய அளவிலான பிரச்சனை இருந்து வரும் வேளையில், இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் அமெரிக்க இணைந்து செயல்படுவது மட்டும் அல்லாமல் அமெரிக்க ராணுவத்தையும் களத்தில் இறங்க உத்தரவிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications