இஸ்ரேல் நாட்டின் முக்கியமான ஹைஃபா துறைமுகத்தைக் கையகப்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதானி குழுமம் 1.2 பில்லியன் டாலர்களை முழுமையாகச் செலுத்தியுள்ளது என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் புதன்கிழமை தெரிவித்தார். இதுமட்டும் அல்லாமல் ஹைஃபா துறைமுகத்தின் உரிமையை அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு இன்று அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கொடுத்தார்.
மத்தியதரைக் கடல் அதாவது mediterranean கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டிற்கு இரண்டு துறைமுகங்கள் உள்ளன, அதில் ஹைஃபா துறைமுகம் ஒன்று. இது மட்டும் அல்லாமல் இது இஸ்ரேல் அரசுக்கு மூலோபாயச் சொத்தாக விளங்கிறது. இதை இந்திய நிறுவனத்திற்கு அளிக்கிறோம் என்றால் இந்தியா மீது இஸ்ரேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என நவர் கிலோன் தெரிவித்தார்.
ஹைஃபா துறைமுகத்தின் உரிமையை அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளிப்பது மூலம் இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரிக்கும் என நவர் கிலோன் தெரிவித்தார்.
ஹைஃபா துறைமுகம்
ஹைஃபா துறைமுகத்தின் உரிமையை அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு இன்று அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கொடுத்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் நாங்கள் இந்தியா நிறுவனங்களான டாடா, கல்யாணி, BHEL என 80 நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளோம்.
81 ஆக அதானி குரூப்
இந்த நிலையில் 81 ஆக அதானி குரூப்-ன் முக்கிய வர்த்தகமாக விளங்கும் துறைமுக வர்த்தகத்துடன் இணைந்துள்ளோம்.இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான துறைமுக வர்த்தகம் பெரிய அளவில் நன்மை அளிக்கும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதேபோல் இஸ்ரேல் நாட்டில் அதானி குழுமம் பல துறையில் முதலீடு செய்ய விரும்புகிறது, இதிலும் வெற்றிப்பெறுவோம் என நம்புவதாகத் தெரிவித்தார்.
திறன்
இதேபோல் ஹைஃபா துறைமுகத்தைச் சரியான முறையில் மேம்படுத்தி இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு அதானி குழுமத்திடம் திறன் உள்ளது எனவும் நவர் கிலோன் தெரிவித்தார்.
இந்தியா - இஸ்ரேல் FTA
இந்தியா - இஸ்ரேல் மத்தியில் ப்ரீ டிரேட் ஒப்பந்தம் (FTA) விஷயத்தில்,இரு நாடுகளும் விதிமுறை, கண்டிஷன்களை இறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளதாக ஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கூறினார். மேலும் இந்தியா பிராந்திய வல்லரசாக இருந்து உலகளாவிய வல்லரசு நாடாக மாறும் பாதையில் உள்ளது என்றும் இஸ்ரேலிய தூதர் தெரிவித்தார்.
Centres of Excellence திட்டம்
Centres of Excellence குறித்துப் பேசுகையில் இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான முழு இராஜதந்திர உறவுகள் நிறைவேற்றப்பட்டு 30 வருடம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ஹியானாவில் இஸ்ரேல் விவசாயத் துறைக்கான பிரத்தியேக Centres of Excellence அமைத்ததுள்ளது என்றும், 10க்கும் அதிகமான Centres of Excellence அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாக நவர் கிலோன் தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications