உலகின் தொழில்நுட்ப திறன்மிக்க நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் ஹமாஸ் உடனான போர் காரணமாகப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இந்த போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பாலஸ்தீன மக்கள் அந்நாட்டை விட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டு உள்ளதால் பல துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் தனது கட்டுமான மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் ஊழியர்கள் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய, இந்தியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொழிலாளர்களைத் தேர்வு செய்து பணியில் நியமிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஓரு முறை 10000த்திற்கும் அதிகமான ஊழியர்களைத் தேர்வு செய்த நிலையில் தற்போது 2வது முறையாக இந்திய ஊழியர்களைத் தேர்வு செய்ய வந்துள்ளது.

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) வெளியிட்ட அறிவிப்பின் படி, இஸ்ரேல் தனது 2வது வேலைவாய்ப்பு சுற்றில் 10,000 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் 5,000 பராமரிப்பாளர்களை (caretakers) தேடுகிறது. இஸ்ரேலுக்கு இந்தியத் தொழிலாளர்களை அனுப்பும் திட்டத்தில் சில முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று 2வது வேலைவாய்ப்பு தேர்வு குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
இஸ்ரேலின் மக்கள் தொகை, குடியேற்றம் மற்றும் எல்லை பாதுகாப்பு (PIBA) அமைப்பு இந்தியக் கட்டுமான தொழிலாளர்களை நான்கு குறிப்பிட்ட பிரிவில் வேலையில் நியமிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ப்ரேம்வொர்க், இரும்பு வளைத்தல், பிளாஸ்டரிங் மற்றும் செராமிக் டைலிங் ஆகிய பிரிவில் பணியில் அமர்த்துகிறது. PIBA குழு இந்தியாவிற்கு வந்து ஒவ்வொருவரின் திறனை மதிப்பீடு செய்து தகுதியான மக்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
சுகாதாரத் துறையில் இஸ்ரேல் 5,000 பராமரிப்பாளர்களைத் தேடுகிறது. இப்பரிவில் பணியில் சேர குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட இந்திய அமைப்பில் அனுபவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 990 மணி நேர வேலை அனுபவத்துடன் ஒரு கேர்டேக்கர் தொடர்பான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு தேர்வின் இரண்டாம் சுற்று மகாராஷ்டிராவில் நடைபெறும் என்று NSDC அறிவித்துள்ளது. முந்தைய சுற்றில் 16,832 பேர் பங்கேற்று, இதில் 10,349 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்வானவர்களுக்கு இஸ்ரேல் அரசு மாதம் ரூ.1.92 லட்சம் ஊதியம், மருத்துவ காப்பீடு, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்குகிறது. இதோடு ஒவ்வொரு மாதமும் ரூ. 16,515 போனஸும் வழங்கப்படுகிறது. இதே சம்பளத்தில் தான் தற்போது மீண்டும் பணியில் சேர்க்க உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications