இஸ்ரேல்-க்கு அடி விழுந்தால்.. இந்தியாவுக்கு வலிக்கும்.. பங்குச்சந்தையில் பணம் போட்டவர்கள் புலம்பல்!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உலக பங்குச் சந்தைகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பொருள் விநியோகத்தில் தொய்வு என பல பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இரு தரப்பு மத்தியிலும் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலுடன் தொடர்பு உள்ள இந்திய நிறுவனங்களின் பங்குகள் மீதும் இதன் தாக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

இஸ்ரேல்-க்கு அடி விழுந்தால்.. இந்தியாவுக்கு வலிக்கும்.. பங்குச்சந்தையில் பணம் போட்டவர்கள் புலம்பல்!

இஸ்ரேல்-ஈரான் போர்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் தாக்குதல்களால் இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இராணுவம், ஈரானின் IRGC புலனாய்வு அமைப்பின் தலைவர் உட்பட நான்கு மூத்த அதிகாரிகளை கொன்றதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தை மூடுவது குறித்து பரிசீலிப்பதாக ஈரான் செய்தி நிறுவனமான IRINN தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை தாக்கம்: ஈரான்-இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு பகுதியில் இருந்து உலக நாடுகளுக்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் வழித்தடத்தை மூடுவதாக ஈரான் அறிவித்தால், உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளகு. இது உலக பங்குச் சந்தைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பங்குகள் மீதான தாக்கம்: இஸ்ரேலுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு உள்ள பல இந்திய நிறுவனங்கள் இந்த மோதலால் பாதிக்கப்படலாம். இதில், BSE-யில் பட்டியலிடப்பட்ட சில முக்கிய நிறுவனங்களைப் பார்ப்போம்:

அதானி போர்ட்ஸ் (Adani Ports) - இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை நிர்வகிக்கிறது. இன்று அதானி போர்ட்ஸ் பங்குகள் 0.34 சதவீத சரிவுடன் 1400.20 ரூபாயக்கு முடிந்துள்ளது. இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் 5.03 சதவீதம் சரிந்துள்ளது.

சன் பார்மாசூட்டிக்கல் (Sun Pharmaceutical) - இஸ்ரேலில் உள்ள Taro Pharmaceutical நிறுவனத்தில் பெரும்பங்கு வைத்துள்ளது. இன்று சன் பார்மா பங்குகள் 0.52 சதவீத சரிவுடன் 1679.00 ரூபாயக்கு முடிந்துள்ளது. இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் 0.70 சதவீதம் சரிந்துள்ளது.

டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் (Dr. Reddy's Laboratories) - மருந்து துறை மூலம் இஸ்ரேலுடன் மறைமுக தொடர்பு உள்ளது, இந்நிறுவனம் இரு நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. இன்று டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் பங்குகள் 0.92 சதவீத சரிவுடன் 1350.00 ரூபாயக்கு முடிந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு வார கால அளவீட்டில் 1.67 சதவீதம் உயர்ந்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) - இஸ்ரேலில் IT மற்றும் கன்சல்டன்சி சேவைகளை வழங்குகிறது. இன்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 1.47 சதவீத உயர்வுடன் 3,496.20 ரூபாயக்கு முடிந்துள்ளது. கடந்த ஒரு வார கால அளவீட்டில் 1.64 சதவீதம் உயர்ந்துள்ளது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers) - இஸ்ரேலில் நகை வணிகம் செய்து வருகிறது. இன்று கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 0.65 சதவீத உயர்வுடன் 522.30 ரூபாயக்கு முடிந்துள்ளது. கடந்த ஒரு வார கால அளவீட்டில் 4.65 சதவீதம் சரிந்துள்ளது.

டைட்டன் கம்பெனி (Titan Company) - இஸ்ரேல் சந்தைகளுடன் ஆடம்பர பொருட்கள் விநியோகத்தில் தொடர்பு உள்ளது. இன்று டைட்டன் கம்பெனி பங்குகள் 0.44 சதவீத உயர்வுடன் 3437.10 ரூபாயக்கு முடிந்துள்ளது. கடந்த ஒரு வார கால அளவீட்டில் 2.10 சதவீதம் சரிந்துள்ளது.

விப்ரோ (Wipro) - இஸ்ரேலில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது. இன்று விப்ரோ பங்குகள் 1 சதவீத உயர்வுடன் 262.80 ரூபாயக்கு முடிந்துள்ளது. கடந்த ஒரு வார கால அளவீட்டில் 3.89 சதவீதம் உயர்ந்துள்ளது.

இன்ஃபோசிஸ் (Infosys) - இஸ்ரேலில் IT மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இன்று இன்ஃபோசிஸ் பங்குகள் 1.25 சதவீத உயர்வுடன் 1622.10 ரூபாயக்கு முடிந்துள்ளது. கடந்த ஒரு வார கால அளவீட்டில் 2.35 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) - இஸ்ரேலில் சர்வதேச வங்கி சேவைகளை வழங்குகிறது. இன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் 0.082 சதவீத உயர்வுடன் 793.00 ரூபாயக்கு முடிந்துள்ளது. கடந்த ஒரு வார கால அளவீட்டில் 3.22 சதவீதம் சரிந்துள்ளது.

லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) - இஸ்ரேல் பங்குதாரர்களுடன் பொறியியல் மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இன்று லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) பங்குகள் 1.10 சதவீத உயர்வுடன் 3627.00 ரூபாயக்கு முடிந்துள்ளது. கடந்த ஒரு வார கால அளவீட்டில் 1.34 சதவீதம் சரிந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி, மத்திய கிழக்கில் உள்ள ஒரு குறுகிய கடல் பாதையாகும். இது உலகின் மிக முக்கியமான எண்ணெய் விநியோக பாதையாகவும் விளங்குகிறது. உலகில் பயன்படுத்தப்படும் மொத்த எண்ணெயில் சுமார் 20% இந்த ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இது ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

இந்த ஜலசந்தியை ஈரான் மூடினால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளவில் எண்ணெய் விலை மேலும் உயரும். இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து, பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, பெட்ரோல் விலை உயர்ந்தால், பேருந்து கட்டணம், காய்கறி விலை மற்றும் அன்றாட பொருட்களின் விலைகளும் உயரும். எனவே, இந்த ஜலசந்தியின் முக்கியத்துவம் மிகவும் அதிகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+