இஸ்ரேல் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வரும் ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வரும் இதேவேளையில், இஸ்ரேல் அரசு கடந்த ஒரு வருடமாக நடந்த பல்வேறு போர் காரணமாக அந்நாட்டின் கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் ப்ளூ காலர் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் அரசு, இந்தியாவின் சில வட மாநில அரசுடன் இணைந்து இந்தியாவில் இருந்து கட்டுமானம், தச்சர், மருத்துவ உதவி பணிகளைச் செய்ய மக்களை அனுப்பி வைத்து வருகிறது. இதற்காக இஸ்ரேல் அரசு தரப்பில் 1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம், தங்குமிடம் மற்றும் உணவு வழங்குகிறது. முதல் முறை பணி தேர்வில் சில ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ள நிலையில் 2வது முறையாக பணியாளர்களைத் தேர்வு செய்யும் வேலையை இஸ்ரேல் தரப்பில் துவங்கியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, இந்நாட்டில் இருந்த அனைத்து பாலஸ்தீன மக்களையும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதனால் அந்நாட்டில் ஊழியர்கள் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது, இதைச் சரி செய்யவே தற்போது இந்தியாவில் இருந்து அதிகப்படியான ஊழியர்களைத் தேர்வு செய்து வருகிறது.
தற்போது இந்தியாவில் 2 வது சுற்று ஊழியர்கள் தேர்வை செய்து வருகிறது இஸ்ரேல், முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊழியர்களும், அவர்களது குடும்பமும் இந்த இஸ்ரேல் தாக்குதல் மூலம் அச்சத்தில் உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் இருந்து ஈரான் நடத்திய 200 ஏவுகணை தாக்குதல் மூலம் எவ்விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், ஹமாஸ் உடனான போரால் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய இந்தியாவில் இருந்து 2வது முறையாக மீண்டும் தொழிலாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இஸ்ரேல் வேலைவாய்ப்பு திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முறை தேர்வு செயல்முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கட்டுமானம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை இஸ்ரேல் தேர்வு செய்ய உள்ளது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) தகவலின்படி, இஸ்ரேல் தற்போது 10,000 கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் 5,000 பராமரிப்பாளர்களைத் தேடுகிறது.
கட்டுமானத் துறையில், பிரேம்வொர்க், இரும்பு வளைத்தல், பிளாஸ்டரிங் மற்றும் செராமிக் டைலிங் போன்ற பணிகளுக்கு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இஸ்ரேலின் PIBA அமைப்பு இந்தியாவிற்கு வந்து நேரடியாக திறன் மதிப்பீடு நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்யும்.
சுகாதாரத் துறையில் பணிபுரிய விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பராமரிப்பு படிப்புகள் பயின்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 990 மணி நேர வேலை அனுபவமும் அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இஸ்ரேல் அரசு மாதம் ரூ.1.92 லட்சம் ஊதியம், மருத்துவ காப்பீடு, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்குகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும் ரூ.16,515 போனஸ் வழங்கப்படும்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?



Click it and Unblock the Notifications