மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் தற்போது புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது என ஜெர்மனியில் உள்ள German Institute for International and Security Affairs ஆய்வு நிறுவனத்தின் நிபுணர் ஹமிட்ரெசா அசிசி தெரிவித்துள்ளார். இவருடைய கணிப்புகள் உலக நாடுகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என்றாள் மிகையில்லை.
ஹமிட்ரெசா அசிசி கணிப்பை ஒற்றை வரியில் கூற வேண்டும் என்றால் இந்த போர் தற்போது "எரிசக்தி உள்கட்டமைப்பு தாக்குதல்" கட்டமாக மாறியுள்ளது. முதலில் எல்லை பாதுக்காப்பு, ஆட்சி மாற்றம், மக்கள் சுதந்திரம் போன்ற அளவில் இருந்த நிலையில் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், ஈரானின் முக்கிய எரிவாயு வளமான South Pars Gas Field மீது தாக்குதல் நடத்தியது தான் இந்த மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது என ஹமிட்ரெசா அசிசி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானின் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், அதன் பொருளாதார அடித்தளமே நேரடியாக தாக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பதிலடி
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் தனது நடவடிக்கைகளை வளைகுடா முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக Ras Laffan Industrial City போன்ற முக்கிய LNG மற்றும் தொழில்துறை மையங்கள் தாக்கப்பட்டுள்ளன. இது இந்த மோதலை பிராந்திய மட்டத்திலிருந்து உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
புதிய ராணுவ உத்தி
ஈரான் தற்போது பதிலுக்கு பதில் என்ற சம அளவிலான பதிலடி என பழைய அணுகுமுறையை விட்டு, அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய உத்தியை பின்பற்றுகிறது. முன்பு காட்டிய கட்டுப்பாடு தவறான முடிவுகளுக்கு வழிவகுத்ததாக கருதி, இப்போது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் தாக்குதல்களை மேற்கொள்ள ஈரான் முடிவு செய்துள்ளது.
இஸ்ரேலில் நேற்று விமான நிலைய தாக்குதல் முதல் இன்று கத்தார் எரிவாயு தளம் வரையில் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்க தலையீடு அபாயம்
ஈரான் தாக்குதள் அதிகரித்துள்ள வேளையில் இந்த மோதலில் அமெரிக்காவின் நேரடி தலையீடு அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் ஆலோசனைகளில், ஈரானின் யுரேனியம் கையிருப்புகளை குறிவைத்து சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது அல்லது Kharg Island போன்ற முக்கிய இடங்களை கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என Hamidreza Azizi தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தயாராகும் ஈரான்
இதற்கு பதிலாக, ஈரான் தனது தெற்கு பகுதிகளில் IRGC சிறப்பு படைகளை குவித்து, ராணுவ வீரர்களை வைத்து தரைவழியிலான போருக்கும் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சில ஈரான் நிபுணர்கள், அமெரிக்க படைகள் நேரடியாக தரையில் இறங்கினால், அதை தங்களுக்கே சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என கருதுகின்றனர் எனவும் Hamidreza Azizi தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல்கள்
இதே நேரத்தில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக "டிகேபிடேஷன் ஸ்ட்ரைக்" எனப்படும் தலைமைத் தாக்குதல்கள் மூலம் ஈரானின் முக்கிய அதிகாரிகளை குறிவைத்து வருகிறது. சமீபத்தில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கத்திப் உயிரிழந்தது இதற்கு எடுத்துக்காட்டு.
மேலும், இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் வடக்கு மாகாணங்களான கிலான் மற்றும் மசந்தரான் பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளன. இது போர் பரப்பளவு மேலும் அதிகரித்து வருவதை காட்டுகிறது.
மொத்தத்தில், இந்த மோதல் தற்போது ராணுவ தாக்குதல்களைக் கடந்து, எரிசக்தி மற்றும் பொருளாதார அடித்தளங்களை குறிவைக்கும் நிலைக்கு மாறியுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி சந்தை, விலை நிலை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை மீது நீண்டகால தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?



Click it and Unblock the Notifications