மத்திய கிழக்குப் பகுதியில் மிகவும் முக்கியமான பொருளாதார நாடாகவும், தொழில்நுட்பத்தில் கில்லியான இருக்கும் இஸ்ரேல் நாட்டுடன், பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்பிற்கும் கடந்த ஒரு வாரமாகக் கடுமையான தாக்குதல் காசா பகுதியில் நடந்து வருகிறது.
தினமும் இஸ்ரேல் படைகள் காசா பகுதிக்குள் முன்னேறி வருவது மட்டும் அல்லாமல் பல லட்சம் இஸ்ரேல் மக்கள் டெக், நிர்வாகப் பணிகளை விட்டு ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்..

இஸ்ரேல் நாட்டின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் லெபனான் ஆகியவையும் இந்தச் சண்டையில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளும் பதற்றத்தில் உள்ளது. ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உடனான சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் "சில நாடுகளின் அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய போர் கூட்டணி (New Front) திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்கிறார்கள்" என்று கூறினார்.
" இதற்கு எங்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் இதற்கெல்லாம் காசா-வில் உள்ள இஸ்ரேல் ஆரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்பதை நாங்கள் அவர்களிடம் கூறுகிறோம்," என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின் படி அவர் கூறினார். ஈரான் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக நிற்கிறது. மேலும் வியாழக்கிழமை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் வியழக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட், அங்கு அவரை ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் வரவேற்றனர் என்றும், வெள்ளிக்கிழமை லெபனான் அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் APF தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாவில்லை.
இது இந்திய மக்களை முக்கியமான நெருக்கடியில் தள்ளும் எனக் கணிக்கப்படுகிறது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கோதுமை போன்ற முக்கிய விவசாயப் பொருட்களின் உலகளாவிய விநியோகத்தைப் பாதித்த நிலையில், இஸ்ரேல்-பாலஸ்தீன தாக்குதல் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யா, சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது மூலம் இதன் விலை அதிகரித்து வந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய குடும்பங்களின் பட்ஜெட் திட்டத்தைப் பாதிக்கலாம்.
இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 2.66 டாலர் உயர்ந்து 85.40 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.57 டாலர் உயர்ந்து 88.57 டாலராகவும் உயர்ந்துள்ளது. இதற்குத் திடீர் உயர்வுக்கு முக்கியமான காரணம் ஈரான் இந்தப் போரில் தலையீடும் என்பது தான்.
உலகளவில் முக்கியக் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் ஈரான், போரில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால்கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்கா தற்போது இஸ்ரேல்-க்குத் துணையாக இருக்கும் காரணத்தால், இந்தப் போரில் ஈரான் தலையிட்டால் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பு ஈரான் மீதான தடையைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல ஆண்டுகளாக ஈரான் நாட்டின் பொருளாதாரம் பல்வேறு வர்த்தகத் தடையால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது குறித்துள்ளது
இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் பட்சத்தில், இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக் கூடும். இது விலைவாசி உயர்வால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்திய மக்களைப் பெரிய அளவில் பாதிக்கும்.
ஆனால் இந்தியாவில் 5 மாநில தேர்தல், அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்கும் காரணத்தால் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications