சர்வதேச முதலீட்டு சந்தையை புரட்டிப்போட்ட இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் முழு அளவிலான படையெடுப்பை துவங்கியுள்ளது.
சனிக்கிழமை பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பால் துவங்கிய இந்த தாக்குதல் தற்போது இரு தரப்புக்கு மத்தியிலான பிரச்சனையை தாண்டி, சர்வதேச சந்தையை பாதிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புகள் மத்தியிலான தாக்குதலில் 900 பேருக்கும் அதிகமாக கொல்லப்பட்டு உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புகள் மத்தியிலான தாக்குதல் மூலம் இஸ்ரேல் நாட்டில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதிலும், இயக்கப்படுவதிலும் பெரும் இடையூறுகள் இருக்கும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இதனால் பல பாதுகாப்பு மற்றும் BCP திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் கடந்த சில வருடத்தில் உயர் தொழில்நுட்பத் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருவதால், இந்த டெக் துறை இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகவும் உள்ளன. இஸ்ரேல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காக இருக்கும், இதேபோல் மொத்த வேலைவாய்ப்பு துறையில் சுமார் 14% வேலைகளை High-tech industries கொண்டுள்ளது.
தொழில்களுக்கு பெரும் இடையூறு: இந்த தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் நாட்டின் வணிகங்கள் வழக்கம் போல் செயல்பட முடியாது. இதேபோல் முதலீட்டாளர்கள் குறுகிய கால அடிப்படையில் முதலீட்டை மாற்று சந்தைகளுக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.
மேலும் டெக் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஹமாஸ் தாக்குதல் காரணமாக ராணுவப் பாதுகாப்புக்காக ராணுவ பணியில் சேர அந்நாட்டு அரசு அழைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் அரசு ஏற்கனவே 300,000 பேரை ராணுவத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவீவ் மற்றும் நியூயார்க் அலுவலகம் வைத்து இயங்கி வரும் ActiveFence நிறுவனத்தின் சிஇஓ Noam Schwartz கூறுகையில், அவசர காலத்தில் எங்கள் ஊழியர்கள் ராணுவத்தில் சேர வேண்டிய நிலை வரும் என்பாதல் முன்கூட்டியே தயாராக இருந்தோம் என தெரிவித்தார். Noam Schwartz இஸ்ரேல் நாட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்காவில் இருக்கும் சில இஸ்ரேல் நாட்டு ஊழியர்களும் போரில் கலந்துக்கொள்ள வந்துள்ளனர். இந்த மோசமான காலக்கட்டத்திலும் எங்களுடைய வர்த்தகம், வாடிக்கையாளர்கள் பாதிப்பு அடையாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக Noam Schwartz கூறுகிறார்.
ஆசிய சந்தை போலவே நேற்று அமெரிக்க பங்குச்சந்தையும் சரிந்தது, Nvidia அடுத்த வாரம் இஸ்ரேல், டெல் அவிவ்-ல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த AI SUMMIT நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது. இக்கூட்டத்திற்கு Nvidia ஜென்சன் ஹூவாங் வர இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நாட்டின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான டவர் செமிகண்டக்டர் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருகிறது. இஸ்ரேல் நாட்டில் ஐபிஎம், ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் முதல் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் டெக் துறையின் ஆரம்பம் 1974 ஆம் ஆண்டு இன்டெல் அலுவலகத்தை துவங்கிய போது உருவானது, ஸ்டார்ட்அப் 1990களில் துவங்கியது. இந்த குறுகிய காலக்கட்டத்தில் அமெரிக்காவை தாண்டி 2வது மதிப்புதக்க சிலிக்கான் வேலியாக இஸ்ரேல் விளங்குகிறது. இஸ்ரேல் நாட்டில் மட்டும் சுமார் 500 MNC நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
MNC நிறுவனங்கள் பெரும்பாலும் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் R&D நிறுவனத்தை வாங்கிய பின்பு தனது வர்த்தகத்தை இந்நாட்டில் துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊழியர்களை இழந்து கணிசமான வர்த்தக பாதிப்பை எதிர்கொள்ளும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications