காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியில் நடந்து வரும் போர் தாக்குதலை நிறுத்துவதற்கும், பயங்கரவாதக் குழுவால் பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஒரு "விரிவான புதிய திட்டத்தை" இஸ்ரேல் சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஜோ பைடன் அறிவிப்பின் படி, கத்தார் ஹமாஸுக்கு இந்த புதிய திட்டத்தை அனுப்பியுள்ளதாகவும், போர் நிறுத்தத்தை நோக்கிய முடிவுகளை இதன் வாயிலாக எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் கொடுத்த திட்டத்தின் படி, இதன் ஆரம்பக் கட்டம் ஆறு வாரங்கள் நீடிக்கும், காசாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இஸ்ரேலியப் படைகள் திரும்பப்பெறப்பட்டு முழுமையான போர்நிறுத்தம் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து பெண்கள், முதியவர்கள், காயமடைந்தவர்கள் உட்படப் பல பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை இந்த மோதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பல நாட்களாக இஸ்ரேலின் மோசமான தாக்குதல் குறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தும் குறித்த அறிவிப்பு வந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
சமீபத்தில் இஸ்ரேல் ராணுவப் படைகள் காசாவில் முக்கிய பகுதியாக இருக்கும் மத்திய ரஃபாவிற்குள் நுழைந்து அப்பகுதியைக் கைப்பற்றியது மட்டும் அல்லாமல் அங்கு பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் புகைப்படங்கள் உலக மக்களைக் கண்கலங்க வைத்தது.
இந்த சம்பவம் நடந்த பின்பும் இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துவதற்கான வரம்பு எட்டப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள போர் நிறுத்த அறிவிப்பு பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் விலை, தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும்.
Gold: தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இஸ்ரேல் தாக்குதல் உள்ளது, இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டதால் தங்கம் மீது முதலீடு செய்தனர்.
தற்போது போர் நிறுத்தம் காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைவது மட்டும் அல்லாமல் வெளியேறுவதற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
Stock Market: இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 3 மாதங்களாக மந்தநிலை நிலவுகிறது. தற்போதைய போர் நிறுத்த அறிவிப்பு மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாகச் சர்வதேசச் சந்தையிலிருந்தும் முதலீடு குவிய வாய்ப்பு உள்ளது.
எண்ணெய் விலை வீழ்ச்சி: ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் OPEC+ கூட்டத்திற்கு முன்னதாக, சந்தையில் அதிக எண்ணெய் இருப்பு இருக்கும் காரணமாக, மூன்றாவது நாளாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications