இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாகவே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளும் ஏவுகணை வீசுவது, டிரோன்கள் மூலம் தாக்கி கொள்வது என எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆனால் இந்த முறை இஸ்ரேல் அமெரிக்க ராணுவத்தோடு கூட்டு வைத்து ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில் கடும் கோபத்தில் இருக்கக்கூடிய ஈரான் ராணுவம், இஸ்ரேலின் பல்வேறு இடங்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இவற்றை தடுத்தாலும் சில இடங்களில் குண்டுகள் விழுகின்றன.

இதனால் இஸ்ரேலில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்த வண்ணம் இருக்கின்றனர். இதற்காகவே Bunker எனப்படும் பதுங்கு குழிகள் மற்றும் நிலத்தடி தங்குமிடங்கள் இஸ்ரேலில் உண்டு. இந்நிலையில் ஈரான் தாக்குதல் தீவிரமடைந்துள்ள சூழலில் இஸ்ரேலில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் பங்க்ர் மற்றும் பதுங்குகுழிகளில் தங்க அனுமதிக்கப்படவில்லை, இந்தியர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது என கூறி ஒரு புகைப்படம் வெளியானது.
எக்ஸ் பக்கத்தில் வெளியான புகைப்படத்தில் இஸ்ரேல் நாட்டு அரசு இந்தியர்கள் ஈரானின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பங்கர்களை வழங்க மறுத்ததால் இந்தியர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்க பாதையில் தங்கக்கூடிய நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகிறது. அதில் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் பலரும் படுத்து உறங்குவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் இஸ்ரேல் தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கய் நிர் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சில குறிப்பிட்ட சுரங்கப்பாதைகளை அவசரகால சூழல்களில் தங்குமிடங்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் போர் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தப்பிக்க இந்த அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ்களில் மக்கள் தஞ்சம் அடைந்து கொள்ளலாம் என இஸ்ரேல் அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது என்றார்.
இந்தியர்கள் மட்டுமல்ல இஸ்ரேல் நாட்டு மக்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டவர்களும் இதுபோல மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் தற்போது தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட உடனேயே மக்கள் இது போன்ற UNDERGROUND SPACE-களுக்கு சென்று விடுவார்கள் என அவர் விளக்கம் தந்திருக்கிறார்.
இந்தியர்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பான இடம் வழங்கவில்லை என பகிரப்படக்கூடிய இந்த புகைப்படத்தில் உண்மை இல்லை என கூறும் அவர் இந்த புகைப்படத்தில் பாருங்கள் பல்வேறு நாட்டு மக்களுமே இருப்பது தெரியும் எனக் கூறியிருக்கிறார். மெட்ரோ ரயில் நிலையங்கள் அரசாங்கத்தால் பாதுகாப்பான இடங்களாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்கள் ஏராளமானவர்கள் இரவு நேரங்களில் இங்கே தஞ்சம் அடைவதை நான் பார்த்திருக்கிறேன் இந்தியர்களும் அது போல தான் தற்போது கஞ்சமடைந்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியா குடிமக்கள் வேலை, வர்த்தகம், கல்வி நோக்கங்களுக்காக வசிக்கின்றனர். இவர்கள் பாதுகாப்பாக இருக்க இஸ்ரேல் நாட்டில் செயல்படக்கூடிய இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் வெளியிடக்கூடிய அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கூறி இருக்கிறது. மேலும் மூடப்பட்ட அறைகளிலேயே முடிந்தவரை தங்கி இருக்க வேண்டும் என்றும் தேவை இல்லாமல் வெளியிலே வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ஈரான் போரால் தலைதூக்கும் புது பிரச்சனை..!! இந்திய மக்களுக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!



Click it and Unblock the Notifications