காசா பகுதியில் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் படைகள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த கெரெம் ஷாலோம் பார்டர் கிராசிங்-ஐ புதன்கிழமை திறந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், ஐக்கிய நாடுகள் அவையின் (UN) கூற்றுப்படி, இதுவரை எந்த மனிதாபிமான உதவிப் பொருட்களும் காசா பகுதிக்குள் வரவில்லை என்றும் உறுதி செய்துள்ளது.

மேலும், இஸ்ரேலிய படையினரின் படையெடுப்பின் போது பாலஸ்தீன தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி இருப்பதால், அங்கு உதவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள யாரும் இல்லை என்றும் ஐநா சபை (UN) விளக்கம் கொடுத்துள்ளது.
காசா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள முக்கிய வழித்தடத்தில் கெரெம் ஷாலோம் கிராசிங் மிகவும் முக்கியமானது. சமீபத்தில் ஹமாஸ் இயக்கம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் நான்கு இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் இந்த வழித்தடம் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதாவது மே 7 ஆம் தேதி இஸ்ரேல் ராணுவத்தின் டேங்கர் படை, காசா மற்றும் எகிப்து இடையே உள்ள ரஃபா கிராசிங்-ஐ கைப்பற்றியது. இதன் காரணமாக, அந்த வழித்தடம் தற்போது மூடப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு கிராசிகங்-ம் தான், 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் தொகை கொண்ட காசா பகுதிக்கு உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு சேர்ப்பதற்கான முக்கிய சாலைகள் ஆகும்.
இஸ்ரேல் படைகள் ரஃபா கிராசிங்-ஐ கைப்பற்றியதைத் தொடர்ந்து ரஃபா நகரின் மீது முழு அளவிலான இஸ்ரேல் படையெடுப்பு இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டு வழித்தடத்தில் தொடர் மூடல், காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணிகளை முடக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகின்றன.
காசாவின் வடக்கு பகுதியில் ஏற்கனவே பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் (UN) தெரிவித்துள்ள நிலையில், ரஃபா கிராசிங்-ஐ இஸ்ரேல் படைகள் கைப்பற்றியது மூலம் கூடுதல் நெருக்கடியை உருவாக்கும் எனத் தெரிகிறது.
இதேவேளையில் இஸ்ரேல் ராணுவமும், இஸ்ரேல் அரசும் ரஃபா நகர் மீது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்குவதற்கான முடிவை நெருங்கி வருவதாக அச்சம் இருப்பதால், கடந்த வாரம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வெடிமருந்துகள் அனுப்புவதை நிறுத்தி வைத்தது.
இது, அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான நீண்டகால நட்புறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஃபா மீதான முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் பயன்படுத்தக்கூடிய தாக்குதல் ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று புதன்கிழமை தெரிவித்தார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications