ஈரான் நாட்டின் மத்திய பகுதியான இஸ்ஃபஹான் நகர விமான நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் ஃபார்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், ஈரான் நாட்டில் குண்டு வெடிப்பு வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானில் உள்ள ஒரு இடத்தைத் தாக்கியதாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19, 2024) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல், ஈரான் இஸ்ரேல் மீது தொடுத்த தாக்குதலுக்கு பதிலடி என கூறப்படுகிறது.

ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற அனுமானங்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரான் நாட்டில் எவ்விதமான ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படவில்லை, வெடிப்பு சத்தம் கேட்டது, ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்தது என தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு செய்தி ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், நாட்டின் மத்திய பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்கப்பட்டதாக அறிவித்துள்ளன. குறிப்பாக, இஸ்ஃபஹான் நகர விமான நிலையத்திலிருந்து இந்த வெடிப்பு சத்தம் கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூன்று ஆளில்லா விமானங்கள் இஸ்பஹான் பகுதியில் வீழ்த்தப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறுகிறது. ஈரானிய அரசு தொலைக்காட்சி இஸ்ஃபஹானைச் சுற்றியுள்ள நிலைமை குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிவித்து வருகிறது.
இதில் சுமார் 1230 GMT மணியளவில் இஸ்பஹான் மீது வானத்தில் மூன்று ட்ரோன்கள் காணப்பட்டன, உடன் ஈரான் ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தி, வானத்தில் இந்த ட்ரோன்களை அழிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் இஸ்ரேலின் பெயரை குறிப்பிடவில்லை.
விமான போக்குவரத்து பாதிப்பு: இந்த சம்பவத்திற்கு பின்பு ஈரான், இஸ்ஃபஹான், ஷிராஸ் மற்றும் தெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு மேலே விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அணு தளங்கள் அருகில் தாக்குதல்? குறிப்பாக இஸ்ஃபஹான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. ஈரான் நாட்டின் அணு திட்டத்தின் மையமாக இருக்கும் Natanz உட்பட பல அணு தளங்கள் இஸ்ஃபஹானில் அமைந்துள்ளன. இதனால், இந்த இடத்தை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாமோ என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
தெஹ்ரான் விமான நிலையம் மூடல்: அமெரிக்க பெடரல் ஏவிஷன் நிர்வாகத்தின் தகவல்படி தெஹ்ரான் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை 7 மணி (GMT) வரை அனைத்து விமானங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் விமானங்கள் பாதிப்பு: Flightradar24 என்ற இணையதளத்தில் விமான போக்குவரத்து தடங்களை கண்காணிக்கும் வசதி உள்ளது. இதன் படி, வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த சில எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைடுபாய் விமானங்கள் திடீர் திருப்பம் செய்து ஈரான் வான்பரப்பை விட்டு வெளியேறிச் சென்றதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications