மாதம் ரூ.1.4 லட்ச சம்பளம்.. உயிரை பணையம் வைத்து இஸ்ரேல் வேலைக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்..!

ஒருமுறை நம் உயிரைப் பணயம் வைத்தால், அதிர்ஷ்டம் நமக்கு கைகூடும் என்பது யாருக்குத் தெரியும்? உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த 27 வயதான ரவீந்திர யாதவ், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டில் வேலை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான தொழிலாளர்கள் மத்தியில் உள்ள பொதுவான உணர்வை இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை தங்கள் குடும்பங்களுக்கு செழிப்புக்கான ஆதாரமாக பார்க்கின்றனர்.

மாதம் ரூ.1.4 லட்ச சம்பளம்.. உயிரை பணையம் வைத்து இஸ்ரேல் வேலைக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்..!

ஹமாஸுடனான போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கட்டுமான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 10,000 தற்காலிக கட்டுமானத் தொழிலாளர்கள் தேவை என இஸ்ரேலின் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை ஏற்று ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி அரசும் ஆர்வமுள்ள திறமையான ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் ஜனவரி 16 மற்றும் ஜன. 21 வரையில் ரோத்தாக் பகுதியில் நடந்த தேர்வில் பங்கேற்றனர். இருப்பினும், 400க்கும் குறைவானவர்களே தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியானது.

இந்தியாவில் வேலை தேடுபவர்கள் மத்தியிலும், சொற்ப வருமானம் மட்டுமே பெறும் வேலைக்கு மத்தியிலும், போராடும் யாதவ் தற்போது 12 மணி நேர வேலைக்குப் பிறகு வெறும் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார். கொத்தனார்கள், பெயிண்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களும் போரில் சிக்கியுள்ள இஸ்ரேல் நாட்டுக்கு செல்லத் தயாராக இருக்கின்றனர்.

பட்டதாரியான யாதவ், இஸ்ரேலில் கட்டுமானப் பணியைப் பெறுவது மூலம் மாதம் ரூ 1.4 லட்சம் பணத்தை சம்பாதிக்கும் வாயப்பு உள்ளதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறார்.

இந்த பணி குறித்து அவர் கூறுகையில், அனுபவம் இல்லாத எங்களைப் போன்ற தொழிலாளர்கள் கூட இவ்வளவு அதிக சம்பளம் மற்றும் பிற சலுகைகளுடன் வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவது நல்லது.

எனக்கு திருமண வயதில் மூன்று சகோதரிகள் உள்ளனர். என் வயதான விவசாயி அப்பா எவ்வளவு சம்பாதிக்க முடியும்? இங்கே, 12 மணி நேர வேலைக்கு 100 ரூபாய் சம்பாதிப்பது ஒவ்வொரு நாளும் சாவதைப் போல உணர்கிறது என்றார் ஐந்து உடன்பிறப்புகளில் இரண்டாவது மூத்தவர்.

தனது பெற்றோருடன் ஓலைக் கூரையின் கீழ் வாழும் யாதவ் இஸ்ரேலுக்குச் செல்வதில் உறுதியாக இருக்கிறார். இது அவரது முதல் வெளிநாட்டுப் பயணம், வாழ்க்கை கடவுளின் கையில் உள்ளது. நிர்பந்தங்கள் நம் பெற்றோரிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

ரோஹ்தக்கில் உள்ள ஆட்சேர்ப்பு திட்டத்தின் மூத்த அதிகாரி இஷா வர்மாவின் கூறுகையில், விண்ணப்பதாரர்கள் ப்ளாஸ்டெரிங், இரும்பு கம்பி வளைத்தல், டைல்ஸ் பழுதுபார்ப்பு மற்றும் தச்சு வேலைகளில் திறன் சோதனைகளை மேற்கொண்டனர். இஸ்ரேலில் அவர்கள் மாதம் ரூ.1.37 லட்சம் சம்பாதிப்பார்கள் என்று உறுதிபடுத்தினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+