சிரியாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக 300க்கும் அதிகமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி பெரும் தாக்குதலைச் சனிக்கிழமை இரவு தொடுத்தது. ஈரானின் புரட்சி பாதுகாப்புப் படை கூறுகையில், ஆபரேஷன் 'True Promise' என்பது இஸ்ரேல் செய்த குற்றங்களுக்கு அந்நாடு பொறுப்பேற்க மேற்கொண்ட தாக்குதல் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் தாக்குதலை அடுத்து அந்நாட்டின் போர் அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பதில் தாக்குதல் குறித்த ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினார், அப்போது அவர் இஸ்ரேலிய பிரதமரிடம் "இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா இரும்புக் கவசம் போல் செயல்படும்" உறுதிப்படுத்தினார்.

ஆனால் அதேவேளையில் ஈரானுக்கு எதிரான எந்தத் தாக்குதலிலும் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. உலக வல்லரசுகள், பிற அரபு நாடுகள் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோர் தாக்குதல் நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தான் உலக நாடுகள் முதல் ரீடைல் முதலீட்டாளர்கள் வரையில் அனைவரின் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் ஒரு குட்டி நாடாக இருக்கும் இஸ்ரேல் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளை எதிர்த்து நிற்கிறது. இந்த ஒரு நாட்டிற்காக மொத்த மேற்கத்திய நாடுகளும் பாதுகாப்பிற்கு வருகிறது. இந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு யார் தெரியுமா..?
பெஞ்சமின் நெதன்யாகு மூன்று முறை இஸ்ரேல் நாட்டின் பிரதமராக மொத்தம் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துள்ளார். அந்நாட்டின் வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட தகவல்களை பலரையும் வியக்க வைத்துள்ளது. சொல்லப்போனால் இவரை போல திறமையான பிரதமர் உலகிலேயே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
1949 இல் டெல் அவிவ் நகரில் பிறந்த நெதன்யாகு பிலடெல்பியா மற்றும் ஜெருசலேமில் வளர்ந்தார். பள்ளி கல்வி முடிந்த பின்பு ஐந்து வருடம் ராணுவத்தில் பணியாற்றிய பின்பு, நெதன்யாகு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவான சயரெட் மட்கலில் (Sayeret Matkal) பணிபுரியும் போது ஒரு தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்தார்.
இதன் பின்பு பெஞ்சமின் நெதன்யாகு படிப்பில் தீவிரம் காட்ட துவங்கினார், இதன் தொடர்ச்சியாக உலகிலேயே மிக முக்கிய மற்றும் பெருமை மிக்க கல்லூரியாக கருதப்படும் எம்ஐடி-யில் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளார், இதில் ஒன்று கட்டிடக்கலையில் இளங்கலை மற்றும் மற்றொன்று வணிகத்தில் முதுகலைப் பட்டம்.
கல்லூரி படிப்புக்குப் பின்பு 1970 களின் பிற்பகுதியில், அமெரிக்காவின் பிரபல பாஸ்டன் கண்சல்டிங் குரூப்-ல் ஆலோசகராகப் பணியாற்றினார். அமெரிக்க வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போக சொந்த ஊருக்கு வந்த பெஞ்சமின் நெதன்யாகு அரசியல் மீதான ஆர்வத்தில் அந்நாட்டின் அரசியலில் தீவரமாக ஈடுபட்டார்.
1996 முதல் 1999 வரை நெதன்யாகு முதல் முறையாக பிரதமராக பதவி வகித்தார். 2009 இல் மீண்டும் பதவியில் நுழைந்த அவர், 2021 வரை பதவியில் இருந்தார். நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற முதல் இஸ்ரேலிய பிரதமர் ஆனார். அவர் ஆறாவது முறையாக பிரதமராகப் பதவியேற்க 2022 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் நிகர சொத்து மதிப்பு 80 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. caclubindia.com இன் அறிக்கையின்படி, நெதன்யாகு உலகின் பணக்கார பிரதமர்களில் ஒருவராக உள்ளார், அவரது சொத்து ஆண்டுக்கு 400% அதிகரித்து வருகிறது.
பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மட்டும் அல்லாமல் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நபராக உள்ளார். அவர் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தலைவர் ஆவார், அமெரிக்காவுடனான அவரது நெருங்கிய உறவுகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?



Click it and Unblock the Notifications