பிரதமர் நாற்காலியை மியூசிக் சேர் ஆக மாற்றும் பெஞ்சமின் நெதன்யாகு.. இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பம்..!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் தேர்தலில் போட்டியிட்ட 2 யூத கட்சிகளும் பெரும்பான்மை இல்லாமல் போனதால், ஆட்சி அமைக்க 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகளின் ஆதரவு அவசியமானது.

இத்தகைய சூழ்நிலையில் அரபு கட்சிகள் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி அமைய கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு இருந்த காரணத்தால் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட காடி ஐசன்கோட்-க்கு ஆதரவு தெரிவித்து.

பிரதமர் நாற்காலியை மியூசிக் சேர் ஆக மாற்றும் பெஞ்சமின் நெதன்யாகு.. இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பம்..!!

இதன் பின்பு இஸ்ரேல் அதிபரும் காடி ஐசன்கோட்-ஐ ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு புதிதாக ஒரு திட்டத்தை மறைமுகமாகக் கொடுத்துள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு மறைமுகமாகக் காடி ஐசன்கோட்டிடம் ஒரு திட்டத்தை வைக்க தயாராகியுள்ளதாகவும், இத்திட்டம் குறித்த ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நாற்காலியை சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தை பெஞ்சமின் நெதன்யாகு, காடி ஐசன்கோட்டிடம் முன்வைக்க முயற்சி செய்வதாக இஸ்ரேல் நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அதாவது 4 வருட ஆட்சி காலத்தில் முதல் 2 வருடத்தைக் காடி ஐசன்கோட்-ம், 2வது பகுதியில் நெதன்யாகு பிரதமராகப் பொறுப்பேற்கும் முறையை முன்வைத்துள்ளார். இதன் மூலம் அரபு கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யூத கட்சிகளே ஆட்சி அமைக்க முடியும், மேலும் நெதன்யாகு-வின் பாலஸ்தீனத்திற்கு எதிரான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியும்.

ஆனால், நெதன்யாகுவின் திட்டத்திற்கு அவரின் கூட்டணி கட்சிகளிடையே, அவருடைய அலுவலக அதிகாரிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது தான் டிவிஸ்ட்.

காடி ஐசன்கோட்-க்கு ஆட்சி அமைக்க அந்நாட்டின் அதிபர் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைகிறது.

அதற்குள் புதிய அரசை காடி ஐசன்கோட் அமைக்க வேண்டும், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தான் பெஞ்சமின் நெதன்யாகு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

மேலும் பெஞ்சமின் நெதன்யாகு-வின் திட்டத்தை குறித்து பேசிய யிஸ்ரேல் பெய்டெய்னு கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், நெதன்யாகுவின் திட்டம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் தந்திரம் என்று விமர்சித்துள்ளார்.

ஐசன்கோட் தலைமையில் புதிய அரசு அமைவதைத் தடுக்கவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 6ஆம் தேதிக்குள் ஐசன்கோட் தலைமையில் ஆட்சி அமைக்காத பட்சத்தில் அடுத்த இடத்தில் இருக்கும் நெதன்யாகு-வுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். இதனால் நெதன்யாகுவின் அழைப்பை நம்ப கூடாது என அவிக்டோர் லிபர்மேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+