இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், உலகளாவிய விமான நிறுவனங்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. எரிபொருள் செலவுகள் மற்றும் நீண்ட மாற்றுப் பாதைகள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் ஈரான் மோதல் போக்குகள் வான்வெளியை மூடுவதால், இந்திய விமானங்கள் குறிப்பாக, குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்கின்றன.நீண்ட பயண தூரங்கள் மற்றும் உயரும் செயல்பாட்டு செலவுகள் ஆகியவை பயணிகளிடமிருந்து அதிக விமானக் கட்டணங்களை வசூலிக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைன்-ரஷ்யா மோதல்களால் ஏற்கனவே, விமான நிறுவனங்கள் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, விமான நிறுவனங்கள் உக்ரேனிய மற்றும் ரஷ்ய வான்வெளியைத் தவிர்க்க வேண்டியிருந்தது. குறிப்பாக ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான விமானங்களுக்கு இதன் விளைவாக விமானப் பாதைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.

இதன் விளைவாக அதிக தூரம், அதிக எரிபொருள் நுகர்வு மற்றும் அதிகரித்த செலவுகள் மற்றும் முக்கிய வான்வெளி மூடுவது உள்ளிட்டவைகள் உலகம் முழுவதும் விமான நேரங்கள் மற்றும் அட்டவணை மாற்றம் உள்ளிட்ட விளைவுகளுக்கு வழிவகுத்தது. இதற்கிடையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் இந்த சிரமங்களை மேலும் நீட்டிக்கும் வகையில் உள்ளது.
இந்திய விமான நிறுவனங்களில் பாதிப்பு:ஏர் இந்தியா ஏற்கனவே மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்களின் அனைத்து விமானங்களும் மத்திய கிழக்கில், வழித்தட நெட்வொர்க்கின் அனைத்து பகுதியிலும் சாத்தியமான பாதுகாப்பு அபாயங்களை தினமும் மதிப்பிடப்படுகின்றன என்றும், தேவைப்பட்டால், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து பகுதிகளைத் தவிர்க்க, சரிசெய்தல் செய்யப்படுகிறது என்றும், எனவே இந்த பிரச்சனையில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இடங்களுக்கு சேவை செய்யும் போது விமானங்கள் ஏற்கனவே இந்து குஷ் மலைகளுக்கு மேல் பறந்து வருவதாகவும், மேற்கு ஐரோப்பாவில் உள்ள எட்டு இடங்களுக்கு பறக்கும் போது இஸ்ரேல் மற்றும் ஜோர்டானைச் சுற்றியுள்ள மாற்று வழிகளில் பறக்கிறோம் என்றும் ஏர் இந்தியாவின் அதிகாரி கூறியுள்ளார். எனவே, எங்கள் பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் விரைவில் டிக்கெட் விலை உயர்வு வகையில் வாடிக்கையாளர்களிடம் பெறப்படலாம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. எரிபொருள் விலையின் தாக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை விமான நிறுவனங்களின் குறிப்பிட்ட அளவுகளை கடந்தால், அவை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படலாம் என்று கூறியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் தொடர்ந்தால் ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. பயணிகள் தங்கள் பண்டிகைக் காலத் திட்டங்களுக்காக முன்கூட்டிய டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவதால், அடுத்த மாதத்தில் குறைந்தபட்சம் 10-20 சதவிகிதம் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும்.
இதற்கிடையில், ஒட்டுமொத்த உலகளாவிய இடையூறுகள் மோதல் காரணமாக மற்ற விமான நிறுவனங்களும் இந்த வழித்தடங்களில் விமானங்களை நிறுத்தி வருகின்றன. ஃபின்னேர் மே 2024 முதல் ஈரானிய வான்வெளியில் விமானங்களை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளதாக ஃபின்னேர் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தோஹாவிலிருந்து எங்களின் விமானங்கள் எகிப்தின் மீது திருப்பிவிடப்படும் என்றும் பயண நேரங்கள் சற்று தாமதமாகும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து ஹெல்சின்கிக்கு எங்களின் நேரடி விமானங்களும் நடந்து வரும் மோதல்கள் தீர்க்கப்படும் வரை ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் என்றும் கூறியுள்ளார்.
தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக விமானங்களை மீண்டும் இயக்குவது, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் விமானங்களுக்கு நீண்ட வழிகள் மற்றும் அதிக செலவுகளை ஏற்படுத்தும் என்று பயண போர்டல் ixigo இன் குழு VP வளர்ச்சி மனன் பஜோரியா கூறியுள்ளார்.
விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த சவால்கள் என்னவென்றால், நீண்ட திசைதிருப்பல்கள் விமான எரிபொருள் செலவுகளை அதிகரிக்கும் மற்றும் இந்த வழித்தடங்களில் விமான கட்டணங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது, KLM, Wizz Air, Finnair, Delta, Qatar Airways, British Airways, Emirates மற்றும் Lufthansa போன்ற முக்கிய உலகளாவிய விமான நிறுவனங்கள் இன்று முதல் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கான தங்கள் சேவைகளை நிறுத்திவிட்டன. இதேபோல், Air India, Vistara மற்றும் IndiGo போன்ற இந்திய விமான நிறுவனங்களும், சர்வதேச விமான நிறுவனங்களுடன் இணைந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஈரானிய வான்வெளியைத் தவிர்த்துள்ளன.
எரிபொருள் விலை ஏற்ற தாக்கம்:அதிகரித்து வரும் மோதல்களால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், எரிபொருள் செலவுகள், விமான நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க செயல்பாட்டுச் செலவுகள் உயருவதற்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிறுவனங்கள் ஏற்கனவே, தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்சியால் சரிவில் இருக்கும் நிலையில், இந்த பிரச்சனைகள் வரவிருக்கும் விடுமுறைக் காலத்தில், பயணக் கட்டணத்தை உயர்த்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
விமானக் கட்டணங்கள் மீதான முழு தாக்கமும் இந்த பிரச்சனைகளால் இருக்கும் என்பதால் டிக்கெட் விலைகளில் அதிகரிப்பு விரைவில் இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்குத் தயாராகி வருவதால், விமான நிறுவனங்கள் சவாலான காலகட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications