இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ 50 வருட வரலாற்றில் முதல் முறையாகத் தனியார் அமைப்புகளுக்குத் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இரண்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் யூஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் பரிசோதனை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கும், ஒரு கல்வி அமைப்பிற்கும் அனுமதி அளித்துள்ளது.

இதோடு அடுத்த சில மாதங்களில் இரு தனியார் அமைப்புகளும் தங்களது செயற்கைக் கோள் இன்ஜின்களை ஸ்ரீஹரி கோட்டா ஸ்பேஸ்போர்ட் மற்றும் திருவனந்தபுரம் ராக்கெட் சென்டரிலும் பரிசோதனை செய்ய உள்ளது. மேலும் இஸ்ரோ விரைவில் தனது செயற்கோள் புகைப்படங்களையும் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளது.
யூஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கிடைத்த தகவல்கள் படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Syzygy ஸ்பைஸ் டெக்னாலஜிஸ் ஆகிய இரு நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த இரு செயற்கைக்கோள்களைப் பரிசோதனை செய்யும் போது சோலார் பேனல் அமைப்பில் பிரச்சனை இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதைச் சரி செய்ய இஸ்ரோ அணி உதவி செய்வதாகவும் இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். இதேவேளையில் UNITYsat-ன் separation system சரி செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
UNITYsat - ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜேப்பியார் கல்லூரி, நாக்பூரில் இருக்கும் ஜிஹெச் ராய்சோனி கல்லூரி, கோவையைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளும் தயாரித்த தனித்தனி செயற்கைக்கோள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் இன்ஜினை ஸ்ரீஹரி கோட்டா ஸ்பேஸ்போர்ட்-லும், சென்னையைச் சேர்ந்த அக்னிகுள் காஸ்மோஸ் தனது இன்ஜினை திருவனந்தபுரம் ராக்கெட் சென்டரிலும் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications